Last Updated : 16 Jan, 2015 06:47 PM

 

Published : 16 Jan 2015 06:47 PM
Last Updated : 16 Jan 2015 06:47 PM

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய ஷாஜியா இல்மி பாஜக-வில் இணைந்தார்

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து முன்பு விலகியா ஷாஜியா இல்மி, இன்று பாஜக-வுடன் தன்னை இணைத்து கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து தள்ளிய ஷாஜியா இல்மி ‘இனி பாஜக-விலேயே தொடர்ந்து நீடித்த்திருக்க’ போவதாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பிறகு விலகிய இல்மி, பத்திரிகையாளராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு, பாஜக, காங்கிரஸ் ஆகிய இருகட்சிகளுடனும் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாகக் கூறிய அவர் இப்போது, “பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாகச் செயலாற்றுவதாக கடந்த 6 மாதங்களாக உணர்ந்து வந்தேன். தூய்மை இந்தியா திட்டத்திற்கு அவர் மகாத்மா காந்தியின் பெயரை பயன்படுத்தியது என்னை நெகிழச்செய்தது.” என்றார்.

முன்பு ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர் கேஜ்ரிவாலின் நம்பகமான நபர்களில் ஒருவராகத் திகழ்ந்த இல்மி 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உத்திரப்பிரதேச மாநில காஸியாபாத் தொகுதியில் போட்டியிட வைக்கப்பட்டார். அதில் அவர் 5-வது இடத்தில் முடிந்து போனார். ஆனால் இந்தத் தொகுதியை தனக்கு ஒதுக்கியது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அமித் ஷா மலர்கொத்து அளிக்க பாஜகவில் இணைந்த இல்மி, “அமித் ஷா அல்லது மற்ற எவரையும் நீங்கள் கேட்டாலும், நான் எந்த வித எதிர்பார்ப்பையும் வைத்துக் கொண்டு கட்சியில் இணையவில்லை என்று கூறுவார்கள், நாட்டிற்கும், நான் சார்ந்த நகரத்திற்கும் சேவை செய்ய இது ஒரு வாய்ப்பு என்றே கருதுகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x