Published : 26 Feb 2014 09:05 AM
Last Updated : 26 Feb 2014 09:05 AM
சமுதாயத்தின் கடைக்கோடி மக்களுக்கும் அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம் திப்புவில் பழங்குடியின மக்களோடு அவர் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்திருக்க வேண்டும், டெல்லியில் இருந்து எல்லாவற்றை யும் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஒருசாரார் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் என்னுடைய நிலைப்பாடு வேறு.
ஆட்சி அதிகாரம், நிதி அதி காரத்தை நாடு முழுவதும் பரவ லாக்கம் செய்ய வேண்டும். ஆட்சி நிர்வாகத்தில் பெண்கள், பழங்குடியின மக்கள், தலித்து கள், மாற்றுத்திறனாளிகள் ஆகி யோருக்கு 50 சதவீத பங்கு அளிக்கப்பட வேண்டும்.
டெல்லியில் மட்டும் அல்ல, அசாம் தலைநகர் குவாஹாட்டி யிலேயே முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். ஏனென் றால் அசாம் மாநில நிலவரம் குறித்த உண்மையான தகவல்கள் டெல்லி தலைமைப்பீடத்துக்கு சென்று சேருமா என்பது சந்தேகம். எனவே இங்கேயே முடிவு எடுக்கப்பட வேண்டும்.
உள்ளூர் தலைவர்களால்தான் தங்கள் பகுதியின் உண்மை நிலவரத்தை உணர முடியும். எனவே அவர்கள் நேரடியாக மக்களைச் சந்தித்து அன்றாடப் பிரச் சினைகளைத் தீர்க்க வேண்டும்.
நாட்டு மக்கள் நலன் கருதி உணவுப் பாதுகாப்பு சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
நாடு முழுவதும் வாழும் வடகிழக்கு மாநில மக்களுக்கு குறைந்தபட்ச உரிமை, பாதுகாப்பு கிடைக்க வகைசெய்யும் இனவாத தடுப்பு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
காங்கிரஸில் குறிப்பிட்ட குடும்பங்கள், குறிப்பிட்ட தனிநபர் களே தேர்தலில் போட்டியிட சீட் பெறுகின்றனர் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது. அந்த நடைமுறையை மாற்ற நினைக்கிறேன். மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களே வேட் பாளர்களை தேர்வு செய்யும் நடைமுறையை கொண்டுவர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என்றார்.
“பிரைமரி” என்ற திட்டத்தின் மூலம் கட்சிக்குள் வாக்கெடுப்பு நடத்தி வேட்பாளர்களைத் தேர்ந்
தெடுக்க ராகுல் காந்தி திட்ட மிட்டுள்ளார். சோதனைரீதியாக தற்போது 16 மக்களவைத் தொகுதிகளை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். அதில் குவாஹாட்டியும் அடங்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT