Published : 21 Jan 2015 09:33 AM
Last Updated : 21 Jan 2015 09:33 AM
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில், முன்னாள் எம்எல்ஏ-க்கள் அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவாலை எதிர்த்து லண்டன் பல்கலைக்கழகத்தில் பயின்ற 30 வயது நுபுர் சர்மா களமிறக் கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட 31 பேர் வெற்றி பெற்றனர்.
இதில், 4 பேர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். கட்சியின் மாநிலத் தலைவராகி விட்டதால் சதீஷ் உபாத்யாயா போட்டியிட வில்லை. மீதம் உள்ள 26 முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கு மீண்டும் போட்டியிட அக்கட்சி வாய்ப்பளித்துள்ளது.
கேஜ்ரிவாலை எதிர்க்கும் வழக்கறிஞர்
பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் தலை வரான ஷாஜியா இல்மியும் கேஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், கேஜ்ரிவால் போட்டியிட இருக்கும் புதுடெல்லி தொகுதியில் லண்டன் பொருளாதாரப் பல்கலைக் கழகத்தில் பயின்ற நுபுர் சர்மாவுக்கு வாய்ப்பளிக் கப்பட்டுள்ளது.
பாஜகவின் மாணவர் அமைப் பான அகில பாரதிய வித்யா பரிஷத்தில் இருந்த வழக்கறிஞரான நுபுர், டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவி ஆவார்.
இது குறித்து செய்தியா ளர்களிடம் நுபுர் பேசும்போது, “கேஜ்ரிவாலை எதிர்த்து நிறுத்தப் பட்டுள்ளதன் மூலம் பலிகடாவாக ஆக்கப்பட்டுள்ளதாக கூறப் படுவது தவறு.
ஏனெனில், நான் அவரை போல் வெற்றி பெற்ற பின் ஓடி விடாமல், தொகுதியில் வசித்து மக்களுக்காக பணியாற்றுவேன்” என்றார்.
பின்னிக்கும் வாய்ப்பு
ஆம் ஆத்மியின் சார்பில் டெல்லியின் லட்சுமி நகரில் போட்டியிட்டு வென்ற பின் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வினோத்குமார் பின்னி, பட்பட்கன்ச் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இங்கு போட்டியிடும் ஆம் ஆத்மியின் தலைவரான மணிஷ் சிசோதியாவை அவர் எதிர்க்கிறார்.
காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சரான கிருஷ்ண தீரத்துக்கு ரிசர்வ் தொகுதியான பட்டேல் நகர் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை சபாநாயகராக இருந்து ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த எம்.எஸ்.தீருக்கும் வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது.
முதல்வர் வேட்பாளராக கிரண் பேடி
சில தினங்களுக்கு முன் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. இவருக்கு கிருஷ்ணா நகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து மொத்தம் ஆறு பெண்கள் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT