Published : 30 Jan 2015 08:50 AM
Last Updated : 30 Jan 2015 08:50 AM
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் அர்விந்த் கேஜ்ரிவாலை சமாளிப் பது தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மூத்த மத்திய அமைச்சர்களுடன் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார்.
டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் அமித் ஷா தலைமையில் டெல்லி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்களான எம்.வெங்கய்ய நாயுடு, அருண் ஜேட்லி, அனந்த் குமார், டாக்டர் ஹர்ஷவர்தன் மற்றும் டெல்லியைச் சேர்ந்த ஆறு எம்பிக்கள் கலந்து கொண்டனர்.
டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு சவாலாக விளங்கும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலை சமாளிக் கும் வகையில் பிரச்சாரக் கூட்டங் களை நடத்துவது குறித்து தீவிர மாக ஆலோசிக்கப்பட்டது.
250 பிரச்சாரக் கூட்டங்கள்
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் ஆகியோர் தனித்தனியாக கலந்து கொள்ளும் வகையில் சுமார் 250 பிரச்சாரக் கூட்டங்கள் டெல்லியில் நடத்துவதென இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகக் கூறப் படுகிறது. இதன்படி, நாளை முதல் பிப்ரவரி 4-ம் தேதி வரை நடைபெறும் 4 பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டங்களில் மோடி கலந்து கொள்வார். பெண் அமைச் சர்களான சுஷ்மா ஸ்வராஜ், உமா பாரதி, ஸ்மிருதி இரானி மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பாஜகவின் முதல்வர் வேட் பாளரான கிரண் பேடியுடன் பிரச்சாரக் கூட்டம் மற்றும் சாலை ஓர பிரச்சாரங்களில் கலந்து கொள் வார்கள்.
டெல்லியில் வாழும் ஹரியாணா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஜார்க் கண்ட் மற்றும் மத்தியப் பிரதேச மாநில மக்களிடையே அவரவர் மாநிலத்தைச் சேர்ந்த பாஜகவின் முதல்வர்கள் பிரச்சாரம் செய்ய உள்ளார்கள். இவர்களுடன் 13 மாநிலங்களைச் சேர்ந்த பாஜகவின் 120 எம்பிக்களும் பிரச்சாரக் கூட்டங்களில் பேச இருக்கிறார்கள்.
தேர்தல் அறிக்கை இல்லை
மத்திய அமைச்சர் அனந்த் குமார் செய்தியாளர்களிடம் கூறும் போது, “இந்த முறை தேர்தல் அறிக்கைக்கு பதிலாக டெல்லி தொடர்பான கட்சியின் குறிக்கோள் களை வெளியிட இருக்கிறோம். இது டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும் வகையில் இருக்கும்” எனத் தெரிவித்தார்.
தலைமையகத்தில் தேர்தல் செயல்பாடுகள்
இந்த தேர்தலில் பாஜக டெல்லி அலுவலகத்தின் செயல்பாடுகள் வழக்கத்துக்கு மாறாக நேற்று முதல் அதன் மத்திய தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு இனி மக்களவைத் தேர்தல் நேரத்தில் இருந்ததுபோல் நாள்தோறும் ஒரு மத்திய அமைச்சர் அல்லது தேசிய தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்து கேஜ்ரிவால் மீது கடும் விமர்சனங்களை வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கேஜ்ரிவாலுக்கு ஐந்து கேள்விகள்
இதன் முதல் நாளான நேற்று மாலை மத்திய இணை அமைச் சர்களான நிர்மலா சீதாராமன் மற்றும் ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கேஜ்ரி வாலுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கு பதில் அளிக்கும்படி வலியுறுத்தி உள்ளனர்.
“கட்சிக்கு நிதி திரட்டுவதற்காக விமானத்தில் செல்லும் கேஜ்ரிவால் உயர் வகுப்பில் பயணம் செய்வது ஏன்? கடந்த முறை ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்காக காங்கிரஸின் ஆதரவைப் பெற்றது ஏன்? மெட்ரோ ரயிலிலும், வேகன்ஆர் காரிலும் வந்து பதவி ஏற்றவர் முதல்வரான பிறகு அரசிடம் எஸ்.யூ.வி வாகனம் கேட்டது என்? உபி அரசின் சிறப்பு போலீஸ் பாதுகாப்பு மற்றும் மத்திய அரசின் இசட் பாதுகாப்பை ஏற்றுக் கொண்டது ஏன்? ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மீது விசாரணைக் கமிஷன் அமைப்பதாகக் கூறி அதை செய்யாதது ஏன்?” உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT