Published : 25 Apr 2014 09:10 AM
Last Updated : 25 Apr 2014 09:10 AM
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை விட, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலின் சொத்து மதிப்பு அதிகமாக உள்ளது.
மோடி அறிவித்துள்ள மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.1.5 கோடியாகும். அர்விந்த் கேஜ்ரி வால் அறிவித்துள்ள மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.2.14 கோடி. இதில் அவரது மனைவியின் சொத்துகளும் அடங்கும்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தபோது இருவரும் அளித்த பிரமாணப் பத்திரங்களின் மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது.
வாரணாசியில் மோடி நேற்று தாக்கல் செய்த வேட்புமனுவின்படி அவரது அசையும் சொத்து மதிப்பு ரூ.51 லட்சத்து 57 ஆயிரத்து 582 ஆகும். இதில் மோடியின் கைவசம் உள்ள ரொக்கம் ரூ.29,700 மற்றும் வங்கி வைப்பு தொகை உட்பட்டதாகும். இத்துடன் ரூ.1.35 லட்சம் மதிப்புள்ள 4 மோதிரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
குஜராத்தின் காந்தி நகரில் மோடிக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வீடு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் புதிதாக நகைகள் மற்றும் சொத்துகள் வாங்க வில்லை. 2012-13 ஆண்டுக்கான வருமானவரி தாக்கலில் தனது ஆண்டு வருமானம் ரூ.4 லட்சத்து 54 ஆயிரத்து 094 எனக் குறிப் பிட்டுள்ளார்.
மனைவி யசோதா பென் விவரம்
தன் மனைவியான யசோதா பென்னின் பெயரையும் குறிப் பிட்டுள்ள மோடி, அவரது சொத்து மதிப்பாக எதையும் எழுதவில்லை. தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்ற யசோதாவிடம் சொத்து எதுவும் இருக்க வாய்ப்பில்லை எனக் கருதப் படுகிறது.
கேஜ்ரிவாலின் சொத்து
வேட்புமனு தாக்கலின்போது கேஜ்ரிவால் அளித்துள்ள விவரத் தின்படி அவரது கையில் இருக்கும் ரொக்கத் தொகை வெறும் 500 ரூபாய் மட்டுமே. எனினும் கேஜ்ரிவாலின் சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.2.14 கோடி. இது, மோடியின் சொத்து மதிப்பை விட அதிகமானது.
கேஜ்ரிவாலிடம் உள்ள அசை யாத சொத்துகளின் மதிப்பு ரூ.92 லட்சம். ஐ.ஆர்.எஸ். அதிகாரி யான அவரது மனைவி சுனிதாவி டம் ஒரு கோடி மதிப்புள்ள அசை யாத சொத்துகள் உள்ளன. கேஜ்ரி வாலுக்கு உத்தரப் பிரதேசத்தின் இந்திராபுரத்தில் ஒரு வீடும் (ரூ.55 லட்சம் மதிப்பு), ஹரியானாவின் ஷிவானியில் ஒரு வீடும் (ரூ.37 லட்சம் மதிப்பு) உள்ளதாகவும் அவரது மனைவிக்கு ஒரு கோடி மதிப்பிலான வீடு குர்காவ்னிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் கடன் இல்லை. வங்கி வைப்புத் தொகையாக கேஜ்ரிவாலிடம் ரூ.4 லட்சமும், அவரது மனைவியிடம் ரூ.17 லட்சமும் இருப்பதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. மோடி, கேஜ்ரிவால் இருவருக் கும் கடன் ஏதும் இல்லை. கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா விற்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ரூ.30 லட்சம் மற்றும் உறவினர்களிடம் ரூ.11 லட்சம் கடன் இருப்பதாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது.
பதிவான வழக்குகள்
தன் மீது பல்வேறு நீதிமன்றங் களில் மொத்தம் 6 வழக்குகள் பதிவாகி நடந்து வருவதாக கேஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். ஆனால், மோடி மீது ஒரு வழக்கும் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT