Published : 03 Apr 2014 01:30 PM
Last Updated : 03 Apr 2014 01:30 PM
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ மக்களவைத் தொகுதியில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் போட்டியிடுகிறார். இதே தொகுதியில், ஆம் ஆத்மி வேட்பாளராக பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜாவித் ஜாப்ரி அறிவிக்கப்பட்டதற்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
முன்னதாக, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இலியாஸ் ஆஸ்மியும் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் ஆதர்ஷ் சாஸ்திரியும் லக்னோவில் போட்டியிட விரும்பியதாகக் கூறப்பட்டது. இதுபற்றி ‘தி இந்து’விடம் ஆதர்ஷ் பேசுகையில், "தேர்தலில் போட்டியிடும் ஆசையுடன் நான் கட்சியில் சேரவில்லை. நாட்டு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டியே ஆம் ஆத்மியில் சேர்ந்துள்ளேன். லக்னோ தொகுதி கிடைக்காதது குறித்து எனக்கு வருத்தம் இல்லை. கட்சியின் முடிவை நான் மதிக்கிறேன்" என்றார்.
இதுகுறித்து ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் தீபக் வாஜ்பாய் 'தி இந்து'விடம் கூறுகையில், "இலியாஸ் ஆஸ்மி முதலில் லக்கிம்பூர்கேரியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். இப்போது, ஜாப்ரியை வேட்பாளராக அறிவித்த பின் லக்னோவை விரும்புவதாக செய்திகள் வருகின் றன. இதுகுறித்து கட்சியின் உயர் மட்டக் குழுவே முடிவு செய்யும்"’ என்றார். ஆதர்ஷ் வெற்றி பெறும் வகையில் பொருத்தமான தொகு தியை கட்சி விரைவில் அறிவிக்கும் எனவும் தீபக் தெரிவித்தார்.
இந்தச் சுழலை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு, உபியின் முஸ்லீம் உலமாக்கள் கட்சியான ராஷ்டிரிய உலமா கவுன்சில், இலியாஸ் ஆஸ்மிக்கு லக்னோவில் போட்டியிட வாய்ப்பளிப்பதாகக் கூறி தன்பக்கம் இழுக்க முயல்வதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து 'தி இந்து'விடம் ஜாப்ரி கூறுகையில், " தோல்விக்கு பயந்து பாஜகவினர் என்னுடைய போட்டி ராஜ்நாத் சிங் வெற்றிக்கு வழிவகுக்கும் என வதந்திகளை கிளப்பி விடுகின்றனர்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT