Last Updated : 12 Jan, 2015 09:33 PM

 

Published : 12 Jan 2015 09:33 PM
Last Updated : 12 Jan 2015 09:33 PM

மத்திய அரசின் செயல்பாடு ஐயப்பாடுகளை எழுப்புகிறது: காங். மூத்த தலைவர் ஆனந்த் சர்மா

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடு பல்வேறு ஐயப்பாடுகளை எழுப்பும் வகையில் உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறினார்.

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா நேற்று கூறும்போது, டெல்லியில் தேர்தல் தேதி அறிவிப்பதிலும் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதிலும் ஏற்பட்டுள்ள காலதாமதம் வியப்பளிக்கிறது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 10-ம் தேதி பிரச்சாரத்துக்காக, டெல்லி தொடர்பான அறிவிப்புகளை அவர் வெளியிடுவதற்கு வசதியாக தேர்தல் தேதி இன்று (நேற்று) அறிவிக்கப்படுகிறது. இதில் சட்டவிதிமீறலாகும்.

டெல்லி தேர்தலை முன்னிட்டு மீண்டும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளதையும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதையும் மக்கள் கவனிக்க வேண்டும்.

டெல்லி அரசுப் பணியாளர்களின் சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. கிரேடு 2, ஸ்டெனோ கிரேடு -2 பணியாளர்களுக்கு சம்பள விகிதிதம் ரூ. 5000 - 80000 என்பதிலிருந்து ரூ. 5500 - 9000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி விரைவில் தயாராகும். எதிர்க்கட்சிகளுக்கு வியப்புகளும் அதிர்ச்சிகளும் காத்துள்ளன. டெல்லி தேர்தல் பிரச்சாரத்துக்கு தலைமை ஏற்கும் பொறுப்பு என்னிடம் தரப்படலாம் என நம்புகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x