Published : 07 Jan 2015 11:07 AM
Last Updated : 07 Jan 2015 11:07 AM
தற்போது திருவனந்தபுரம் தொகுதி மக்களவை உறுப்பின ராக உள்ள சசிதரூர், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செய லாளர் பதவிக்கு போட்டி யிட்டு தோல்வி அடைந்தவர் ஆவார்.
பிறகு மத்திய வெளியுறவுத் துறையின் இணை அமைச்சராக இருந்தபோது துபாயில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு காஷ்மீரை சேர்ந்த சுனந்தா புஷ்கரை சந்தித்தார். அடுத் தடுத்த சந்திப்புகளுக்குப் பிறகு இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
ரகசியமாக இருந்த அவர் களின் காதல் விவகாரம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் எழுந்த சர்ச்சை யால் அம்பலமானது. இந்த விவ காரத்தால் அமைச்சர் பதவியை இழந்த தரூர், ஆகஸ்ட் 2010-ம் ஆண் டில் சுனந்தாவை கேரள முறைப் படி மணந்தார். இந்த திருமண விழாவில் சுனந்தாவின் 17 வயது மகன் மற்றும் தரூரின் இரு மகள் களும் கலந்து கொண்டு வாழ்த்தி னர். சுனந்தாவின் பெயரில் வெளி நாடுகளில் பல கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. அவரது இறப்பின்போது சுனந்தாவிடம் பல கோடி மதிப்புள்ள நகைகளும் இருந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT