Published : 07 Jan 2015 10:46 AM
Last Updated : 07 Jan 2015 10:46 AM

ஆந்திரத்தில் பஸ் கவிழ்ந்து 16 பேர் பலி: நிவாரணம் வழங்க சந்திரபாபு நாயுடு உத்தரவு

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் நேற்று காலை, அரசு பஸ் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழந்தனர். 44 பேர் காயமடைந்தனர்.

அனந்தபூர் மாவட்டம், மடகசிரா பகுதியில் இருந்து பெனுகொண்டாவுக்கு ஆந்திர அரசு பஸ் 60 பயணிகளை ஏற்றி கொண்டு நேற்று காலை சென்று கொண்டிருந்தது. இப்பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது; மலைவழிப்பாதையில் எதிரே வந்த ஆட்டோவின் மீதி மோதாமல் இருக்க வலது பக்கம் திருப்பியதால் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பஸ் விபத்துக்குள்ளானது.

பஸ்ஸில் பயணம் செய்த 8 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 52 பேர் படுகாயமடைந்தனர். பெனுகொண்டா போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள், பெனுகொண்டா, அனந்தபூர், மடகசிரா அரசு மருத்துவமனை களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். காயமடைந்தவர்களில் மேலும் 8 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 8 பேர் பள்ளி, கல்லூரி மாணவர்களாவர்.

ஓட்டுநர் கங்கப்பாவின் அலட்சிய போக்கால்தான் இந்த விபத்து நடைபெற்றதாக போலீ ஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தில் கங்கப்பாவும் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து அறிந்ததும், பிரதமர் நரேந்திர மோடி இறந்தவர்களின் குடும்பத் தாருக்கு ஆழ்ந்த அனுதாபங் களை தெரிவித்தார்.

முதல்வர் சந்திரபாபு நாயுடு இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, இறந்தவர் களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சமும், படுகாயமடைந்த வர்களுக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் நிதி உதவி வழங்க உத்தரவிட்டார். சம்பவ இடத்தில் 3 அமைச்சர்கள் விரைந்து சென்று மீட்பு பணியை பார்வையிட்டனர்.

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x