Published : 24 Jan 2015 03:57 PM
Last Updated : 24 Jan 2015 03:57 PM
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளரும் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், குடியரசு தினவிழாவில் கலந்துகொள்ள தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஜனவரி 26-ந் தேதி டெல்லியில் நடைபெற இருக்கும் குடியரசு தினவிழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொள்கிறார். குடியரசு தின விழா அணிவகுப்பில் அவர் முதன்மை விருந்தினராக பங்கேற்கிறார். ஆனால் இந்த விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பு தனக்கு விடுக்கப்படவில்லை என்று டெல்லியின் முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மியின் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "குடியரசு தினவிழாவில் பங்கேற்க எனக்கு அழைப்பு வரவில்லை. அதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் விழாவில் பங்கேற்க நான் விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
இதனிடையே நெறிமுறைக்கு உட்பட்டே முன்னாள் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், தேவைப்பட்டால் சிறப்பு அழைப்பை அளிக்கலாம் என்றும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT