Published : 07 Jan 2015 11:09 AM
Last Updated : 07 Jan 2015 11:09 AM
குஜராத் மாநிலத்தில், 4-வது மாடியிலிருந்து தவறி விழுந்த நான்கு வயது குழந்தை பெரிய காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது.
குஜராத் மாநிலம் வல்சாத் பகுதியில் 4-வது மாடியில் மகி தேசாய் என்ற 4 வயது பெண் குழந்தை தனது தாத்தா பாட்டியின் கண்காணிப்பின்கீழ் விளையாடிக் கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக, அங்கிருந்து தவறி கீழே விழுந்தது.
கார் பார்க்கிங் பகுதியில் அக் குழந்தை விழுந்ததை, அண்டை வீட்டுக்காரர் ஒருவர் பார்த்து, ஓடி வந்து குழந்தையைத் தூக்கினார். அதிர்ஷ்டவசமாக கார் பார்க்கிங் பகுதியிலிருந்த சிறு பிளாஸ்டிக் மேற்கூரை மீது குழந்தை விழுந்ததில், அதன் வேகம் தடைபட்டுள்ளது.
இதனால், குழந்தைக்கு பெரிய அளவில் காயம் ஏதும் ஏற்பட வில்லை. இருப்பினும் அக்குழந்தை உடனடி யாக மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டது. அதனைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந் தைக்கு பாதிப்பு ஏதும் இல்லை எனத் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அக் குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவர் குரேஷி கூறும்போது, “இது நம்ப முடியாத சம்பவம். 50 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தால் எலும்புகளுக்கும் தசைகளுக்கும் சேதம் ஏற்படும். ஆனால், குழந்தை மகிக்கு புட்டத்தில் மிகச் சிறிய முறிவு ஏற்பட்டுள்ளது” என்றார்.
அக்குழந்தையின் தந்தை ஹேமந்த் கூறும்போது, “இது என் மகளின் இரண்டாவது பிறப்பு. அவள் எங்களுக்கு ஒரே குழந்தை. இச்சம்பவம் மிக அதிசயமானது” என்றார்.
குழந்தை மாடியிலிருந்து கீழே விழுந்தது, அங்கிருந்த கண் காணிப்பு கேமராவில் பதிவாகி யுள்ளது. இச்சம்பவம் கடந்த டிசம்பர் 30-ம் தேதி நிகழ்ந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT