Published : 31 Jan 2015 08:14 PM
Last Updated : 31 Jan 2015 08:14 PM
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ஆம் ஆத்மி கட்சி மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார்.
சிபிடி மைதானத்தில் அவர் உரையாற்றிய போது, “கடந்த ஆண்டு நீங்கள் வாக்களித்து பதவியில் அமரவைத்தவர்கள் உங்கள் முதுகில் குத்திவிட்டனர். உங்கள் கனவுகளை தகர்த்து விட்டனர்.
உங்கள் வாழ்க்கையில் தன்னம்பிக்கையான வித்தியாசத்தை ஏற்படுத்த, நான் தோளுக்குத் தோள் நின்று பணியாற்றக்கூடிய அரசைத் தேர்வு செய்யுங்கள்.
மக்கள் ஒருமுறை தவறிழைக்கலாம், ஆனால் மீண்டும் மீண்டும் இழைக்க வாய்ப்பில்லை. ஓராண்டுக்கு முன்பு டெல்லி மக்கள் கனவுகளுடன் வாக்களித்தனர். கடந்த ஆண்டு நீங்கள் வாக்களித்தவர்கள் உங்கள் முதுகில் குத்தி விட்டனர். உங்கள் கனவுகளை தகர்த்து விட்டனர்.
துரோகிகளுக்கு டெல்லி வாக்களிக்காது.
இந்திய நாட்டை உலகிற்கு தெரியவைக்க வேண்டுமென்றால் டெல்லிதான் அதனைக் காட்ட சிறந்த இடம். தலைநகரில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் நாட்டில் மட்டுமல்ல உலகிலும் தனது அடையாளத்தை ஏற்படுத்துவது. டெல்லி இந்தியாவை பிரதிநித்துவம் செய்கிறது.”
இவ்வாறு பேசினார் பிரதமர் மோடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT