Published : 21 Feb 2014 12:58 PM
Last Updated : 21 Feb 2014 12:58 PM
பிப்ரவரி 25-ஆம் தேதி சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 11 அரசியல் கட்சித் தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தி மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்தியில் மதவாத சக்தி ஆட்சி அமைப்பதை தடுக்க வேண்டும் என தெரிவித்த காரத், இதற்காக வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடும் என கூறினார்.
காங்கிரஸுக்கு மாற்று பாஜக அல்ல என்றும், கார்ப்பரேட் நிறுவனத் தலைவர்கள் மோடியை ஆட்சியில் அமர்த்துவதற்கு ஏதுவான சூழலை உருவாக்கி வருகின்றனர் எனவும் காரத் குற்றம் சாட்டினார்.
முசாபர்நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஜோலா கிராமத்துக்குச் சென்ற காரத், அவர்கள் மறுவாழ்வுக்காக ஏக்தா காலனி அமைக்கப்படும் என உறுதியளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 3-வது அணி குறித்து தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT