Published : 27 Dec 2014 05:28 PM
Last Updated : 27 Dec 2014 05:28 PM
பிஹாரில் தண்டவாளப் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ரயில் மோதியதில் 5 பணியார்கள் பரிதாபமாக பலியாகினர்.
பிஹாரின் ரோட்டாஸ் மாவட்டத்தில் உள்ள கம்ஹூ ரயில் நிலையம் அருகே இந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம் நிகழ்ந்தது.
இன்று நண்பகல் 12.30 மணியளவில் 5 ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் பணியாற்றி கொண்டிருந்த பாலத்தில் அஜ்மீர் - செல்டா எக்ஸ்பிரஸ் பயங்கர வேகத்தில் வந்து மோதியது. இதில் இன்ஸ்பெக்டர் உட்பட 5 பராமரிப்பு ஊழியர்கள் பலியாயினர்.
நண்பகல் நேரத்திலும் பனிமூட்டம் இருந்ததால் ரயில் வந்ததை பணியாளர்கள் கவனிக்கவில்லை என்று அதிகாரி அரவிந்த் குமார் ரஜக் தெரிவித்தார்.
ஐவரின் உடல்களும் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT