Published : 04 Dec 2014 03:35 PM
Last Updated : 04 Dec 2014 03:35 PM

மகாராஷ்டிர ஆட்சியில் பங்கேற்கிறது சிவசேனா: துணை முதல்வர் பதவி இல்லை; இன்று அமைச்சரவை விரிவாக்கம்

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை களுக்குப் பிறகு, மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜகவுடன் இணைந்து சிவசேனா ஆட்சியில் பங்கேற் கிறது. அக்கட்சியைச் சேர்ந்த 12 பேர் அமைச்சராகப் பொறுப் பேற்பார்கள் என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித் துள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் பாஜகவும் சிவசேனாவும் தங்களது 25 ஆண்டு கால கூட்டணியை முறித்துக் கொண்டன.

தேர்தலில் பாஜக 121 இடங் களில் வென்றது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 145 தொகுதிகள் தேவை. எனினும், பாஜக ஆட்சியமைத்தது. சரத்பவா ரின் தேசியவாத காங்கிரஸ் ‘வெளியிலிருந்து ஆதரவளிக்கத் தயார்; அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், ஆட்சி யைக் கவிழ்க்க மாட்டோம்’ என வெளிப்படையாக அறிவித்தது.

இதனிடையே, ஆட்சியில் பங் கேற்பது தொடர்பாக சிவசேனா, பாஜக இடையே மறைமுக பேச்சுவார்த்தைகள் தொடங்கின. மத்திய அமைச்சரவை விரிவாக் கத்தின் போது, சிவசேனா பரிந் துரைக்காத, அக்கட்சியின் எம்.பி.சுரேஷ் பிரபுவுக்கு ரயில்வே அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. இது பாஜக, சிவசேனா உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஆட்சியில் சிவேசனா பங்கேற்பது தற்போது உறுதியாகியுள்ளது. இதனால், 63 சிவசேனா எம்எல்ஏக்கள் இணைவதால் பாஜக கூட்டணி 184 எம்எல்ஏக்களுடன் பெரும்பான்மை பலம் பெறும்.

இதுதொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர்களுடன் செய்தியாளர்களை நேற்று ூசந்தித்தார். அவர் கூறும்போது, :மகராஷ்டிர அரசாங்கத்தில் பாஜகவும் சிவசேனாவும் இணைந் திருக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம். சில பிரச் சினைகள் காரணமாக, எங்களால் முடிவெடுக்க இயலவில்லை. எனவே, பாஜக முதலில் ஆட்சிய மைத்தது. பாஜக மற்றும் சிவசேனா தொண்டர்கள் இரு கட்சிகளுமே ஆட்சியில் அங்கம் வகிக்க வேண்டும் என விரும்பினர்.

சிவசேனா ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேயிடம் நான் கேட்டுக்கொண்டேன். அவரும் சாதகமான பதிலைத் தெரிவித்தார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரவுடன் பேச்சு நடத்தினார்.

12 அமைச்சர்கள்

சிவசேனாவுக்கு 5 கேபினெட் உட்பட 12 அமைச்சர் பதவிகள் வழங் கப்படும். துணை முதல்வர் பதவி உருவாக்கப்படவில்லை. 8 முதல் 10 பாஜக எம்எல்ஏக்களும் அமைச்சராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்பார்கள்.

சிவசேனாவுடன் கூட்டு ஒத் துழைப்பு குழுவை உருவாக்கி, உள்ளாட்சித் தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவோம். மற்ற கூட்டணிக்கட்சிகளும் ஆட்சியில் பங்கேற்பது குறித்து விரைவில் முடிவு செய்யப் படும். இவ்வாறு பட்னாவிஸ் தெரிவித்தார்.

சிவசேனா மூத்த தலைவர் சுபாஷ் தேசாய் கூறும்போது, “மகாராஷ்டிரத்தில் வலிமை யான ஆட்சியை அளிக்க இரு கட்சியினரும் முடிவு செய்துள் ளோம். நல்ல நிர்வாகத்தை அளிக்க முயற்சி செய்வோம். மக்களின் உத்தரவுக்கு மதிப்பளித்து செயல்படுவோம்” என்றார்.

எனினும் 12 அமைச்சர்களின் இலாகா விவரம் கூறப்படவில்லை. உள்துறையை சிவசேனா கோரி வருவதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x