Published : 05 Feb 2014 05:41 PM
Last Updated : 05 Feb 2014 05:41 PM
இந்திய அரசியலில் இருந்து மூன்றாவது அணி என்ற கருத்தாக்கத்துக்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது.
இந்த அணியை சேர்ந்த கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்கள் எல்லாம் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார்.
மக்களவைத் தேர்தலையொட்டி கோல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பங்கேற்றார்.
கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது: “மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக ஆட்சி அமைக்கும். அப்போது காற்று எந்தப் பக்கம் வீசிகிறது என்பதை மூன்றாவது அணியினர் அறிந்து கொள்வார்கள். மூன்றாவது அணி என்ற ஏற்பாடே, இந்தியாவை மூன்றாம் தர நாடாக ஆக்குவதற்காகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்களில் மூன்றாவது அணியைச் சேர்ந்த கட்சிகள் ஆட்சியில் உள்ளன. அதனால்தான் அந்த மாநிலங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன. மேற்கு பகுதியில் உள்ள மாநிலங்கள் எதிலும் மூன்றாவது அணியைச் சேர்ந்தோரின் ஆட்சி இல்லை.
இந்திய அரசியலில் இருந்து மூன்றாவது அணி என்ற கருத்தாக்கத்துக்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது.
தேர்தல் வரும்போதெல்லாம் மதச்சார்பின்மை, ஏழை மக்களின் நலன் போன்ற விஷயங்களை பற்றி மூன்றாவது அணியினர் பேசத் தொடங்கிவிடுகின்றனர். ஆனால், அவர்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் வளர்ச்சியின் பலன்கள் முஸ்லிம்களை சென்றடையும் வகையில் செயல் பட்டதில்லை. முஸ்லிம்களை வாக்கு வங்கியாகத்தான் அவர்கள் எப்போதும் கருதுகின்றனர்.
குஜராத்தில் சிறுபான்மையினரின் தனி நபர் வருமானம் மிகவும் அதிகமாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்பு கிறேன். அரசுக்கு அரசியல் சாசனம் மட்டும்தான் மதப் புத்தகமாக இருக்க வேண்டும். தேசியவாதத்தில் மட்டுமே நம்பிக்கை இருக்க வேண்டும்” என்றார் மோடி.
பிரணாபுக்கு கிடைக்காத பிரதமர் பதவி
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமராகும் வாய்ப்பு இருமுறை வந்தது. ஆனால், அதை சோனியா காந்தி குடும்பத்தினர் தடுத்துவிட்டனர். இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின், ராஜீவ் காந்தி பிரத மராக்கப்பட்டார்.
ஜனநாயக முறைப்படி கட்சியின் மூத்த அமைச்சர்தான் பிரதமராகியிருக்க வேண்டும். ஆனால், இந்திராவின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்த பிரணாபுக்கு
அந்த வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அது மட்டுமல்ல, ராஜீவ் காந்தி தலைமையிலான அமைச்சரவையில் பிரணாபுக்கு அமைச்சர் பொறுப்பு கூட அளிக்கப்படவில்லை.
அதேபோன்று 2004-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்கப் போவ தில்லை என அறிவித்த சோனியா காந்தி, கட்சியின் மூத்த தலைவ ரான பிரணாப் முகர்ஜிக்கு அப்பதவியை அளிக்கவில்லை. மன்மோகன் சிங்கை பிரதமராக நியமித்துவிட்டனர். மேற்கு வங்க மக்கள் இதை மறந்துவிடக் கூடாது என்றார்.
மம்தாவை எதிர்க்காத மோடி
கோல்கத்தா கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியை நேரடியாக விமர்சிப்பதை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தவிர்த்துவிட்டார்.
கூட்டத்தில் பேசிய மோடி, “நாட்டுக்கே வழிகாட்டியாக மேற்கு வங்க மாநிலம் இருந்து வரு கிறது. இந்த மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதி களிலும் பாஜகவை வெற்றி பெறச் செய்யுங்கள். மாநில வளர்ச்சிப் பணிகளை மம்தா பானர்ஜி மேற் கொள்ளட்டும். மத்தியில் உள்ள ஆட்சியை என்னிடம் ஒப்படைத் தால், டெல்லியிலிருந்து இந்த மாநிலத்துக்கு கிடைக்க வேண் டிய உதவிகளை செய்வேன். மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல மாநில அரசின் செயல்பாடுகள் மட்டும் போதாது, மத்திய அரசின் உதவியும் தேவை.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் மாநில ஆட்சி, மத்தியில் எனது தலைமையில் பாஜக ஆட்சி, இருவரையும் கண்காணிக்க குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி என்ற நிலை ஏற்பட்டால் இந்த மாநில மக்கள் பெரிதும் பயனடைவார்கள்” என்றார்.
மேற்கு வங்க அரசை மறைமுக மாக குறைகூறிய மோடி, மம்தா பானர்ஜியை நேரடியாக விமர் சிக்கவில்லை. தேர்தலுக்குப் பின் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தேவைப்படலாம் என்ப தால், மம்தாவை விமர்சிப்பதை நரேந்திர மோடி தவிர்த்துவிட்டார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT