Published : 22 Dec 2014 10:03 AM
Last Updated : 22 Dec 2014 10:03 AM
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாறவில்லை, எப்போதும்போல் சுறுசுறுப்பாக மக்கள் பணி ஆற்றி வருகிறார் என்று அவருக்கு நெருங்கிய நட்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த மே மாதம் மன்மோகன் சிங் பதவி விலகினார். 82 வயதாகும் அவர் மாநிலங்களவைக்கு நாள் தவறாமல் செல்கிறார். ஆனால் பாதி நேரம் மட்டுமே அவை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அமளி ஏற்படும்போது அவர் அவையில் இருப்பதில்லை.
பொதுவாக மன்மோகன் மிகவும் அமைதியானவர். ஆடம் பரத்தை விரும்பாதவர், கேமரா வெளிச்சத்தை விரும்பாதவர். இப்போதும் அவர் அப்படியே இருக்கிறார்.
வெயில் காலம் என்றால் மெல்லிய சுடிதார்-குர்தாவும், குளிர்காலம் என்றால் உடைகளை அணிகிறார். ஆனால் தலையில் கட்டும் நீல நிற டர்பனில் மட்டும் எப்போதுமே மாற்றம் இருக்காது.
கடந்த 2009-ம் ஆண்டில் அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. எனவே உணவு, உடல்நலத்தில் மிகுந்த அக்கறையுடன் செயல் படுகிறார். காலையில் வழக்க மான உடற்பயிற்சிகளை மேற்கொள் கிறார். அன்றாடம் பொதுமக்களை யும் அவர் சந்தித்துப் பேசி அவர் களின் குறைகளைக் கேட்டறி கிறார்.
விசாரணைக்கு தயார்
சுரங்க நிலக்கரி ஊழலில் மன்மோகன் சிங்கிடம் வாக்குமூலம் பெற டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறித்து அவர் கவலை கொள்ளவில்லை. சிபிஐ விசாரணைக்கு அவர் தயாராகவே உள்ளார்.
காங்கிரஸ் கட்சி நடவடிக்கை களில் அவர் இப்போதும் தீவிரமாக பங்கெடுத்து வருகிறார். கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினராக உள்ள அவர் முக்கியமான கூட்டங் களில் கலந்து கொண்டு ஆலோசனைகளை அளிக்கிறார்.
பொதுநிகழ்ச்சிகளை பெரும் பாலும் தவிர்த்து விடுகிறார். சுயசரிதை எழுதும் எண்ணம் அவருக்கு இப்போது இல்லை.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT