Last Updated : 14 Dec, 2014 11:19 AM

 

Published : 14 Dec 2014 11:19 AM
Last Updated : 14 Dec 2014 11:19 AM

காணாமல் போன குழந்தைகள் பற்றிய தகவலை வெளியிட புதிய இணையதளம்: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

காணாமல் போன குழந்தைகளைப் பற்றிய தகவலை அறியவும், அவர்களை கண்டுபிடிப்பதற்கும் உதவும் வகையில் இணையதளம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும் போது, “பணக்காரப் பெற்றோர்களால், காணாமல் போன தங்களின் குழந்தைகளை கண்டுபிடிக்க அதிக பணம் செலவழிக்க முடியும். ஆனால், ஏழைகளால் அந்த அளவுக்கு செலவு செய்ய முடியாது. எனவே, அவர்களுக்கு உதவும் வகையில், காணாமல் போன குழந்தைகள் பற்றிய விவரங்களை வெளியிட இணையதளம் தொடங்க முடிவு செய்துள்ளோம்.

தெருக்களில் சுற்றித்திரியும் குழந்தைகளைப் புகைப்படம் எடுத்து, இந்த இணையதளத்தில் யார் வேண்டுமானாலும் வெளியிடலாம். அந்த புகைப்படங்களைப் பார்த்து சம்பந்தப்பட்ட பெற்றோர், தங்களின் குழந்தையை கண்டு பிடிக்க உதவிகரமாக இருக்கும்.

இ காமர்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வணிகத் துறையில் நுழைய தபால் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு, மருத்துவம், பாதுகாப்பு போன்றவற்றில் புதுமையான திட்டங்களைத் தெரிவிக்க சம்பந்தப்பட்ட துறைகளின் வல்லு நர்கள் சேவை மனப் பான்மையுடன் முன்வர வேண்டும்.

ஜன் தன் திட்டத்தில் தற்போது வரை 8 கோடியே 50 லட்சம் பேர் வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர். விரைவில் இந்த எண்ணிக்கை 10 கோடியாக உயரும். இவ்வாறு ரவி சங்கர் பிரசாத் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x