Last Updated : 09 Dec, 2014 10:00 AM

 

Published : 09 Dec 2014 10:00 AM
Last Updated : 09 Dec 2014 10:00 AM

எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு சாத்வி சர்ச்சைப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி: மாநிலங்களவையில் பணிகள் தொடங்கின

சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி விவகாரம் தொடர்பாக மாநிலங் களவை தலைவர் ஹமீது அன்சாரி வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

டெல்லியில் நடைபெற்ற கூட்ட மொன்றில் பேசிய மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் தேவி, சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, சாத்வி நிரஞ்சன் ஜோதி மன்னிப்புக் கேட் டார். அவரை மன்னித்து விடும்படி பிரதமர் நரேந்திர மோடியும் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், அதை ஏற்க மறுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள், சாத்வி ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்தி நாடாளு மன்றத்தில் கடந்த வாரம் அமளி யில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று மாநிலங் களவை கூடியதும், அமைச்சர் அல்லது எம்.பி.க்களின் அவ தூறான பேச்சுகளுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டு வர வேண்டும். அது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதற்கு ஆளும் கட்சி எம்.பி.க்கள் எதிர்ப் புத் தெரிவித்தனர். அவைத் தலை வரின் அனுமதியின்றி எந்தவொரு தீர்மானத்தையும் கொண்டு வரக் கூடாது என்று அவர்கள் தெரிவித்தனர். இருதரப் பினரும் தங்களின் கருத்தை வலி யுறுத்தி கோஷமிட்டதால், அவை நடவடிக்கைகள் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டன.

பின்னர் அவை கூடியதும், காங் கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா பேச அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதை அவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் ஏற்றுக்கொண்டார்.

ஆனந்த் சர்மா பேசும்போது, “சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரி வித்த அமைச்சரை பதவி நீக்க வேண்டும் என்ற கோரிக் கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அவருக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறை வேற்ற வேண்டும் என்ற கோரிக்கை யையும் அரசு ஏற்கவில்லை. இந்நிலையில், அமைச்சரின் பெயரை குறிப்பிடாமல், அவ தூறான கருத்துகளைத் தெரி விக்கும் அமைச்சர் மற்றும் எம்.பி.க் களுக்கு இந்த அவை கண்டனம் தெரிவிக்கிறது என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தற்போது கோரிக்கை விடுக்கி றோம்” என்றார்.

இந்த தீர்மானத்தை நிறை வேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட 9 எதிர்க் கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அதுபோன்றதொரு தீர்மானத்துக்கு தான் அனுமதி அளிக்கவில்லை என்று அவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பேசும்போது, “அவைத் தலை வரின் அனுமதியின்றி எந்தவொரு தீர்மானத்தையும் கொண்டு வரக்கூடாது” என்றார்.

அதன் பின் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து அவை நடவடிக் கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

அனைத்து கட்சி கூட்டம்

பின்னர், மாநிலங்களவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டத்துக்கு அவைத் தலைவர் ஹமீது அன்சாரி ஏற்பாடு செய்தார். அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற அரசு விரும்பவில்லை. எனவே, தீர்மானத்துக்குப் பதிலாக அவைத் தலைவர் அறிக்கை வெளி யிட்டால் போதுமானது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன் பின்பு அவை கூடியதும், ஹமீது அன்சாரி பேசும்போது, “இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 4-ம் தேதி பிரதமர் ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை மாநிலங்களவை ஆமோதிக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொதுக்கூட்டங்களில் கண்ணிய மாக பேச வேண்டும். இதன் மூலம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை காக்க முயற்சிக்க வேண்டும்” என்றார். இதையடுத்து மாநிலங்கள வையில் அமைதி திரும்பியது. பல்வேறு விவகாரங்கள் தொடர் பான விவாதங்கள் நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x