Published : 27 Feb 2014 12:00 AM
Last Updated : 27 Feb 2014 12:00 AM

காங். ஆட்சியில் 20 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நிறுவனங்கள் மூடல்- மோடி குற்றச்சாட்டு

மின்துறையைத் தவறாக நிர்வாகம் செய்ததன் மூலம் நாட்டை இருண்ட காலத்துக்குக் காங்கிரஸ் கொண்டு சென்று விட்டது என பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

மத்தியப்பிரதேச மாநிலம் பகவன்புராவில் இந்தியாவின் மிகப்பெரிய சூரிய சக்திமின் உற்பத்தி நிறுவனம் 1,000 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. 130 மெகாவாட் மின்உற்பத்தித் திறன் கொண்ட நிறுவனத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து நரேந்திர மோடி பேசியதாவது:

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 20 ஆயிரம் மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதன்மூலம் நாட்டை இருண்ட காலத்துக்கு காங்கிரஸ் தள்ளி விட்டுவிட்டது.

நிலக்கரிக்கு செயற்கைத் தட்டுப்பாடு ஏற்படுத்தி, மின்னுற் பத்தி நிறுவனங்கள் அவற்றை இறக்குமதி செய்யும் நிர்பந்தத்தை காங்கிரஸ் ஏற்படுத்தியது. அது போன்ற கொள்கைகளால் நாட் டின் பொருளாதாரம் கடுமை யாகப் பாதிக்கப்பட்டது ரூபாய் மதிப்பும் சரிந்தது.

இந்நாடு பசுமைப்புரட்சி யையும், வெண்மைப் புரட்சி யையும் கண்டிருக்கிறது. விரை விலேயே காவிப்புரட்சியைக் காணப்போகிறது. நாடு முழுவதும் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுவதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பிரச்சினைக்கு பாஜகவால் தீர்வு கிடைக்கும் என மக்கள் நம்புகின்றனர்.

நாட்டில் இயற்கை வளமும் இளைஞர் வளமும் அதிகமாக இருந்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியால் நாடு முன்னேற்றப்பாதையில் செல்லவில்லை என்றார்.

மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் கூறுகையில், “2015-ம் ஆண்டில் மத்தியப்பிரதேச மாநிலம் 25 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு உபரி மின்சாரத்தை உற்பத்தி செய்யும்” என்றார். மேலும், மத்திய அரசு கசகசா(அபின்) உமியை எரித்துவிடும்படி விவசாயிகளைக் கேட்டுக் கொண்டதால் விவசாயிகள் நஷ் டத்தைச் சந்தித்துள்ளனர் எனக் குற்றம்சாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x