Last Updated : 07 Dec, 2014 10:39 AM

 

Published : 07 Dec 2014 10:39 AM
Last Updated : 07 Dec 2014 10:39 AM

ஒகேனக்கல் எந்த மாநிலத்தில் உள்ளது? - கர்நாடக-தமிழக எல்லையை வரையறுக்க மீண்டும் சர்வே நடத்த வேண்டும்: கர்நாடக முதல்வர் சித்தராமையா வலியுறுத்தல்

கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும எல்லைப் பிரச் சினைக்கு தீர்வு காணும் வகையில் மறு சர்வே மேற்கொள்ள வேண் டும் என கர்நாடக முதல்வர் சித்தரா மையா வலியுறுத்தி உள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை சாம் ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள மாதேஷ்வரன் மலைக்கு சென்ற சித்தராமையா, பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

18 ஆண்டுகளுக்குப் பிறகு மாதேஷ்வரன் மலைக்கு வருகி றேன். இங்கு வந்த பலரை வீரப்பன் கடத்திச் சென்று துன்புறுத்தி யுள்ளார். அந்த வகையில் என்னையும் வீரப்பன் கடத்த திட்டம் தீட்டினார். அதனால்தான் வரவில்லை.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிதாக அணை களைக் கட்ட கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. இந்த திட்டத்தால் பெங்களூரு, மைசூரு மாநகர மக்களுக்கு தடையில்லா குடிநீர் கிடைக்கும். மண்டியா, சாம்ராஜ் நகர், ராம்நகர் ஆகிய‌ மாவட்டங்களில் கரும்பு சாகுபடிக்கு தேவையான நீர் கிடைக்கும்.

மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான திட்டவரைவு, நிபுணர்களின் ஆய்வு உள்ளிட்ட அனைத்து பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதற்கு வரும் 31-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளைப் போல மேகே தாட்டு அணை மிக பிரமாண்டமாக கட்டப்படும். மழைக் காலங்களில் வீணாகக் கடலில் கடக்கும் நீர் இதில் தேக்கப்படும். இந்த அணை கட்டப்பட்டால் நீர்ப்பாசனமும், நிலத்தடி நீர்மட்டமும் உயரும். இந்த திட்டத்துக்கு மத்திய அரசும், நீதித் துறையும் விரைவில் அனுமதி வழங்கும் என நம்புகிறேன்.

தமிழகத்துக்கு உதவும்

மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கு தமிழ கத்தின் எதிர்ப்பும், அச்சமும் அர்த்த மற்றது. காவிரி நடுவர் மன்றம் கர்நாடகத்துக்கு வழங்கிய நீரைப் பயன்படுத்த எங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. தமிழகத்துக்கு வழங்கிய நீரை பயன்படுத்தி தமிழக அரசு ஒகேனேக்கலில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறை வேற்றியது.

எனவே ஒகேனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை கர்நாடக அரசு எதிர்க்கவில்லை. ஆனால் மேகே தாட்டு திட்டத்தை அரசியல் நோக்கத் துக்காக‌ தமிழகம் எதிர்க்கிறது. மேகேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டினால் அது தமிழகத் துக்கும் பெரும் உதவியாக இருக்கும். வறட்சி காலத்தில் அந்த அணையிலிருந்து தமிழகத்துக்கு எளிதில் நீர் கிடைக்கும்.

ஒகேனக்கல் யாருடையது?

ஒகேனக்கல் எந்த மாநில‌ எல்லையில் அமைந்திருக்கிறது என்பது குறித்து கர்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் இடையே பிரச்சினை நீடிக்கிறது. இரு மாநிலங்களுக்கு இடையே 50 ஆண்டுகளுக்கும் மேலாக 68 கிமீ தூரத்துக்கு எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது.

இரு மாநில எல்லையை வரையறை செய்ய கர்நாடக அரசு தயாராக இருக்கிறது. ஆனால் தமிழக அரசு எல்லா விவகாரங் களிலும் ஒத்துழைக்க மறுக்கிறது. எனவே மத்திய சர்வே ஆணையம் உடனடியாக கர்நாடக-தமிழக எல்லையை மறு வரையறை செய்யும் வகையில் சர்வே மேற் கொள்ள‌ வேண்டும். இது தொடர் பாக மத்திய சர்வே ஆணையத்துக்கு கர்நாடக அரசு கடிதம் எழுத உள்ளது என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x