Published : 11 Dec 2014 10:21 AM
Last Updated : 11 Dec 2014 10:21 AM
இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று சந்தித்துப் பேசுகிறார்.
இந்த சந்திப்பின்போது அணு சக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் உறவை பலப்படுத் துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தெரிகிறது.
கடந்த 2000-வது ஆண்டி லிருந்து இரு நாட்டு தலைவர் களும் ஆண்டுக்கொரு முறை சந்தித்து உயர்நிலைக் கூட்டம் நடத்தி வருகின்றனர். மாஸ்கோ, டெல்லியில் மாறி மாறி நடை பெறும் இந்தக் கூட்டத்தில் இரு நாட்டு உறவை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத் தப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் இன்று நடைபெறும் உயர்நிலை கூட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதில் இரு நாடுகள் இடையே 15 முதல் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளா தாரத் தடை விதித்துள்ள நிலை யில், இந்தியாவுடன் பொருளாதார உறவுகளை ரஷ்யா வலுப்படுத்த முயலும் என்று தெரிகிறது.
தனது பயணத்துக்கு முன்ன தாக புதின் கூறும்போது, “இந்தியாவுக்கு திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்ய ரஷ்யா விரும்புகிறது. ரஷ்யாவின் ஆர்டிக் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பண பணியில் இந்தியாவின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை ஈடுபடுத்தவும் விரும்புகிறோம்” என்றார்.
எரிசக்தி தேவைக்கு இறக்கு மதியையே இந்தியா பெரிதும் சார்ந்திருக்கும் நிலையில், இருநாட்டுத் தலைவர்களும் இது தொடர்பாக பேசுவார்கள் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT