Published : 02 Dec 2014 09:39 AM
Last Updated : 02 Dec 2014 09:39 AM

ஆந்திர பல்கலை.களில் ஜப்பான் மொழி அறிமுகம்: முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்

ஆந்திர பல்கலைக்கழகங்களில் ஜப்பான் மொழி அறிமுகம் செய்யப் படும் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய சந்திரபாபு நாயுடு, ஹைதராபாத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறி யதாவது:

ஜப்பான் சுற்றுப் பயணம் மிகவும் பயனுள்ளதாகவும், வெற்றிகர மாகவும் அமைந்தது. அங்குள்ள நகரங்கள் மிகவும் அழகாக இருப்பதுடன், உலகின் வளர்ந்த நாடுகள் பட்டியலிலும் ஜப்பான் இடம் பிடித்துள்ளது. இதற்கு அந்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் கடுமையான உழைப்பே முக்கிய காரணம். பல தடைகளையும், தடங்கல்களையும் தாண்டி அவர்கள் இந்த அளவுக்கு உயர்ந் துள்ளனர்.

ஆந்திராவின் புதிய தலை நகரை நிர்மாணிக்கும் பணியை மேற்கொள்ள பல்வேறு நிறு வனங்கள் முன்வந்துள்ளன.அங் குள்ள பல முன்னணி நிறுவனங்கள் ஆந்திராவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சில நிறுவனங்களுடன் இது தொடர்பாக ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது.

குறிப்பாக, 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும், 10 ஆயிரம் மெகாவாட் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அந்நாட்டு அமைச்சர் இங்கு வர உள்ளார். மேலும் வேளாண் துறைக்கு தேவையான நவீன உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனமும் ஆந்திராவில் அமைக் கப்பட உள்ளது. இதன் மூலம் விவசாயத் துறை உற்பத்தி அதிகரிக்கும்.

இங்கு உள்ள 3 பல்கலைக் கழகங்களில் ஜப்பான் மொழி கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப் படஉள்ளது. இதன் மூலம் ஜப்பானியர்கள் இங்கு வந்து கல்வி கற்க வாய்ப்பு ஏற்படும். மேலும் இந்த மொழியை நாம் கற்றுக் கொண்டால் ஜப்பானில் வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x