Published : 16 Dec 2014 10:37 AM
Last Updated : 16 Dec 2014 10:37 AM

காவிரியின் குறுக்கே புதிய அணைகள் கட்டுவது உறுதி: கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் அறிவிப்பு

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணைகள் திட்டமிட்டப்படி கட்டப்படும், எக்காரணம் கொண்டும் இந்த திட்டம் நிறுத்தப்படாது என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் நேற்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

கர்நாடக அரசின் அணை கட்டும் திட்டத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலை யில் அம்மாநில அரசின் இந்த வெளிப்படையான அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் பெல காவியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது மதச்சார் பற்ற ஜனதா தளம் உறுப்பினர் ஹெச்.சி.பாலகிருஷ்ணா, மேகே தாட்டு அணை திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றார்.

டிசம்பர் 31 கடைசி தேதி

இதைத் தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டில் பேசியதாவது:

மண்டியா, ராம்நகர் மாவட்ட எல்லையில் மேகேதாட்டு அருகே காவிரி ஆறு பல்வேறு துணை ஆறு களுடன் கலக்கிறது. குறிப்பாக ராம்நகர் மாவட்ட எல்லையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகே தாட்டு அருகே உள்ள நீர்ப்பிடிப்பு மிக்க பகுதியில் புதிய அணைகளை கட்ட அரசு முடிவெடுத்துள்ளது.

இங்கு நிறைவேற்றப்படும் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பெங்களூரு, மைசூருவுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும். மண்டியா, ராம்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கும் நீர் வழங்கப்படும். புதிய அணை கள் கட்டுவதற்கான நில ஆய்வு கள், நீர் வள ஆய்வுகளை அந்தந்த துறையின் நிபுணர்கள் செய்து முடித்துள்ளனர்.

தற்போது அணை கட்டமைப்பு வரைபடம், செலவின‌ மதிப்பீடுகள் மற்றும் திட்டவரைவு பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்ட வரைவு அறிக்கை இறுதி செய்யும் பணியில் நீர்வளத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கான உல களாவிய விருப்ப ஒப்பந்தப்புள்ளி கள் கோரப்பட்டுள்ளன. ஒப்பந்தப் புள்ளி அறிக்கைகள் வருவதற்கு டிசம்பர் 31-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளிகளின் விருப்ப மனுக்களை தேர்வு செய்த பிறகு அணைகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கும்.

வெளிப்படையாக விவாதிக்க வேண்டாம்

தற்போது மேகேதாட்டு திட்டம் தேசிய மற்றும் உலக அளவில் ஊடகங்களில் உணர்வுப்பூர்வமாக பார்க்கப்படுகிறது. எனவே இத்திட்டம் குறித்து சட்டப்பேரவை யில் வெளிப்படையாக பேசுவது பரபரப்பை ஏற்படுத்தும். எனவே வெளிப்படையான விவாதம் நடத்துவது சரியாக இருக்காது.

இந்த சூழலை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேகேதாட்டுவில் கட்டப்பட இருக்கும் புதிய அணை கள் குறித்து மேலும் தகவல் தேவைப்பட்டால் என்னை தனி யாக சந்தித்து விவரங்களை பெற் றுக்கொள்ளலாம். மேகேதாட்டு திட்டம் குறித்து மண்டியா, ராம்நகர் மாவட்டங்களை சேர்ந்த உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளேன்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x