Last Updated : 22 Dec, 2014 02:48 PM

 

Published : 22 Dec 2014 02:48 PM
Last Updated : 22 Dec 2014 02:48 PM

மதமாற்றப் பிரச்சினையால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: பிரதமர் பதில் அளிக்காததால் வெளிநடப்பு

மதமாற்றப் பிரச்சினையால் நேற்று மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இப்பிரச்சினை தொடர்பாக பிரதமர் பதில் அளிக் காததைக் கண்டித்து எதிர்க்கட்சி யினர் வெளிநடப்பு செய்தனர்.

நேற்று மக்களவை தொடங்கி யதும் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி மறைந்த, முன்னாள் எம்.பி. ஹெச்.ஏ.டோராவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், கேள்வி நேரம் தொடங்கியதும், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் சபாநாயகர் இருக்கைக்கு முன்பு வந்து மதமாற்றப் பிரச்சினை தொடர்பாக கோஷம் எழுப்பினர்.

அவர்களின் கோஷத்துக்கு இடையே கேள்வி நேரமும் தொடர்ந்தது. அவையில் பிரதமர் நரேந்திர மோடியும் அமர்ந்திருந் தார்.

முலாயம் சிங் புகார்

அப்போது பேசிய முலாயம் சிங் “அரசு அளித்த உறுதிமொழி களில் ஒன்றுகூட நிறைவேற்றப் படவில்லை. அரசு கூறியபடி விவசாயிகள் கணக்கில் பணம் சென்று சேரவில்லை. பாகிஸ்தான் மற்றும் சீனா ஆக்கிரமித்து வரும் இந்திய நிலங்களை அரசு மீட்கவில்லை. இவை தொடர்பாக அவையிலுள்ள பிரதமர் பதில் அளிக்க வேண்டும்” என்றார்.

இதை பிரதமர் மோடி சிரித்தபடியே கேட்டுக்கொண்டி ருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு, “ இது ஒன்றும் தேர்தல் பிரச்சாரக் கூட்டமல்ல. பிரதமர் அவையில்தான் இருக்கிறார். மதமாற்றத்தையும், மதத்துக்கு திரும்புவதையும் அரசு ஆதரிக்கவில்லை. வெளியில் சில அமைப்புகள் செய்யும் அந்த செயல்களுக்கு அரசு ஆதரவளிப் பதாக குற்றம் சாட்டுவது தவறு” என்றார்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு

முன்னதாக, மதமாற்றம் குறித்து காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் பேசும்போது, “கேரளத்தில் இரு மதமாற்ற நிகழ்ச்சிகளும், குஜராத்தின் வதோதராவில் ஒரு சம்பவமும் நடந்துள்ளன. இதை அரசு கண்டிக்கிறதா இல்லையா என அறிய விரும்புகிறேன். இவை, சங்பரிவார அமைப்புகளின் திட்டமிட்ட நடவடிக்கைகள். பொய்யான உறுதிமொழிகள் கொடுத்து அப்பாவிகளை மதமாற்றம் செய்வதால், நாட்டில் மதநல்லிணக்க சூழல் கெடுகிறது” என்றார்.

எதிர்க்கட்சிகள் அமளி

காங்கிரஸ் கட்சியின் அவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் என்.கே.ராமச்சந்திரன் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் பப்பு யாதவ் ஆகியோரும் இதுதொடர் பாக எழுந்து பேசத் தொடங்கினர். இதனை ஆளும்கட்சியினர் ஆட்சேபித்து குறுக்கிட்டனர். இதனால், அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

இப்பிரச்சினையால் காலை மற்றும் மதிய உணவுக்குப் பிறகு என இரண்டு முறை அவை ஒத்திவைக்கப்பட்டது.

வெளிநடப்பு

இப்பிரச்சினை தொடர்பாக பிரதமர் பதில் அளிக்காததால், அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x