Last Updated : 01 Dec, 2014 09:46 AM

 

Published : 01 Dec 2014 09:46 AM
Last Updated : 01 Dec 2014 09:46 AM

ஓடும் பஸ்ஸில் பாலியல் தொல்லை: இளைஞர்களை பெல்டால் விளாசிய சகோதரிகள்

ஹரியாணா மாநிலம், ரோட்டக் நகரில் ஓடும் பஸ்ஸில் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்களை 2 சகோதரிகள் பெல்டால் விளாசி விரட்டியடித்தனர்.

ரோட்டக் நகரைச் சேர்ந்த சகோதரிகள் ஆர்த்தி, பூஜா. இருவரும் கடந்த 28-ம் தேதி உள்ளூர் பஸ்ஸில் பயணம் செய்தனர். அப்போது சில இளைஞர்கள் அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர்.

சகோதரிகள் இருவரும் பொறுமை காத்தனர். ஆனால் இளைஞர்களின் அத்துமீறல் அதிகரித்ததால் பொங்கியெழுந்த இருவரும் பெல்டால் அவர்களை விளாசினர். பதிலுக்கு அந்த இளை ஞர்களும் தாக்கினர். இதில் இரு பெண்களும் நிலைகுலைந்தனர்.

அதன்பின்னர் சுதாரித்துக் கொண்ட சகோதரிகள், ஒன்றாக சேர்ந்து நின்று அந்த இளை ஞர்களை சரமாரியாக தாக்கினர். சிறிது தொலைவு சென்ற வுடன் பஸ்ஸை நிறுத்திய டிரைவர் சண்டையில் ஈடுபட்ட இளைஞர்களையும் சகோதரி களையும் கீழே இறக்கிவிட்டார்.

அதன்பின்னரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், 2 சகோதரிகளையும் தாக்க முய ன்றனர். துணிச்சலுடன் செயல்பட்ட இரு பெண்களும் செங்கற்களை சரமாரியாக எறிந்து அந்த இளைஞர்களை துரத்திவிட்டனர்.

பஸ்ஸில் நடந்த சம்பவங்களை மற்றொரு பெண் தனது செல்போன் கேமராவில் படம் பிடித்தார். அந்த காட்சிகள் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பானதைத் தொடர்ந்து ஹரியாணா மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆர்த்தி, பூஜா ஆகியோர் கூறியதாவது:

பஸ்ஸில் இருந்த சில இளை ஞர்கள் எங்களிடம் தகாத வகையில் நடந்து கொண் டனர். வேறு வழியில்லாமல் எங்களின் தற்காப்புக்காக அவர்களைத் தாக்கினோம். ஆனால் டிரைவர், கண்டக்டர் உட்பட பஸ்ஸில் இருந்த யாரும் உதவிக்கு வரவில்லை. ஒரே ஒருவர் மட்டும் சமரசம் செய்ய முயன்றார் என்று தெரிவித்தனர்.

அந்த பெண்களின் தந்தை ராஜேஷ் குமார் கூறியபோது, இந்தச் சம்பவத்தில் சமரசமாக செல்லுமாறு போலீஸார் எங்களை நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ரோட்டக் நகரைச் சேர்ந்த மது, நிகிதா ஆகியோர் ஈவ்-டீசிங் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x