Published : 04 Dec 2014 10:44 AM
Last Updated : 04 Dec 2014 10:44 AM

செம்மரக் கடத்தல் வழக்கில் அப்பு கைது: ஆந்திர போலீஸார் நடவடிக்கை

காஞ்சி வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்புவை, செம்மரக் கடத்தல் வழக்கில் ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர்.

கம்சானி கோபாலகிருஷ்ண மூர்த்தி என்கிற அன்புசெல்வம் என்கிற அப்பு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், வெதுரு குப்பம் மண்டலம் பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் பல ஆண்டுகளுக்கு முன் பிழைப்பு தேடி சென்னைக்குச் சென்றார். அரசியல் பின்பலம் கொண்ட இவர் மீது கொலை, கடத்தல், கட்டப்பஞ்சாயத்து போன்ற 15 வழக்குகள் சென்னை போலீஸா ரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சங்கரராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கு, 2 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் சென்னகேசவுலு என்பவர் கொல்லப்பட்ட வழக்கு ஆகியவையும் இவர் மீது பதிவாகி உள்ளன.

இந்நிலையில் ஸ்ரீகாளஹஸ்தி கொல்லபல்லி வனப்பகுதியில் இருந்து கடத்தப்பட்ட செம்மரங் களை, அப்பு சட்டவிரோதமாக வாங்கியதாக ஸ்ரீகாளஹஸ்தி போலீஸார் இவரை தேடிவந்தனர்.

மேலும் இவர் மீது ஆந்திர மாநிலத்தில் பல்வேறு செம்மர கடத்தல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தற்போது ஆந்திர போலீஸார் தேடிவரும் செம்மர கடத்தல்காரர் கொல்லம் கங்கிரெட்டிக்கு, அப்பு நெருங்கிய நண்பர் என்றும் போலீஸார் கூறுகின்றனர்.

சில ஆண்டுகளாக தலைமறை வாக இருந்த அப்புவை சிறப்பு ஆயுதப்படை போலீஸார் சித்தூரில் கைது செய்தனர். இதை ரகசியமாக வைத்திருந்த போலீஸார், விசாரணைக்குப் பிறகு அப்புவை நேற்று காலை ஸ்ரீகாளஹஸ்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இவருக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய சென்னையில் இருந்து 10-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஸ்ரீகாளஹஸ்தி நீதிமன்றத்துக்கு வந்தனர். மேலும் அப்புவின் ஆதரவாளர்களும் அங்குவந்து போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவர்களை போலீஸார் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x