Published : 01 Dec 2014 12:39 PM
Last Updated : 01 Dec 2014 12:39 PM
எல்லையை அயராது பாதுகாக்கும் கடமை தவறாத வீரர்களுக்கு தலை வணங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய எல்லை பாதுகாப்புப் படை உருவானதன் 49-வது எழுச்சி தினம் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "நமது எல்லை பாதுகாப்புப் படை எழுச்சி தினத்தன்று நான் நமது வீரர்களை வணங்குகிறேன்.
நம்மை அமைதியாக வாழ செய்ய அவர்கள் எல்லையில் கடுமையான பணியை மேற்கொள்கின்றனர். அவர்களது அயராத உழைப்பும் பண்பும் அவர்களை எப்போதும் உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கவும், நம்மை ஊக்குவிப்பதாகவும் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
எல்லை பாதுகாப்புப் படை கடந்த 1965 டிசம்பர் மாதம் 1-ஆம் எழுச்சி பெற்றது. அன்று முதல் இரவு, பகல் மற்றும் காலநிலை மாற்றத்தை கருத்தில்கொள்ளாமல் வீர்ர்கள் நமது எல்லையை பாதுகாத்து வருகின்றனர்.
இந்திய எல்லையை எப்போதும் அமைதியான நிலையில் இருக்க செய்யவும் நாடுகடந்த குற்றங்களை தடுத்த நிறுத்தவும் உலகின் மிகப் பெரிய எல்லை பாதுகாப்புப் படை பாடுபடுவதாக அதன் வலைதளத்தின் முகப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT