Last Updated : 20 Dec, 2014 01:21 PM

 

Published : 20 Dec 2014 01:21 PM
Last Updated : 20 Dec 2014 01:21 PM

கட்டாய மதமாற்றத்தை பாஜக ஆதரிக்காது: அமித் ஷா

கட்டாய மதமாற்றத்தை பாஜக ஒருபோதும் ஆதரிக்காது என கேரள மாநிலம் வந்த பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கொச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கட்டாய மதமாற்றத்தை பாஜக ஒருபோதும் ஆதரிக்காது. மதச்சார்பின்மை பற்றி பேசும் சில அரசியல் கட்சிகள் உண்மையில் அக்கொள்கையில் தீவிரமாக இருந்தால், மதமாற்ற தடுப்புச் சட்டத்தை இயற்ற பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்" என்றார்.

உத்தரப்பிரதேசத்தில் 'கர் வாப்ஸி' என்ற பெயரில் கட்டாய மதமாற்றம் நடந்தது தொடர்பாக அமித் ஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்க மறுத்த ஷா, "விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. அதனால் அது பற்றி பேச தயாராக இல்லை" எனக் கூறினார்.

தேசத்தை மதத்தின் அடிப்படையில் பிரிக்க பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி முன்வைத்த குற்றச்சாட்டை அவர் திட்டவட்டமாக மறுத்தார். "அடிப்படை ஆதரமற்ற குற்றச்சாட்டு" என்றார்.

வெளிநாட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் கருப்புப் பணத்தை மீட்டெடுப்பதில் பாஜக அரசு முனைப்புடன் இருப்பதாக கூறினார். ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில், பாஜக நிச்சயம் வென்று அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்த அமித் ஷா, அங்குள்ள மக்கள் பெருமளவில் பாஜகவில் இணையுமாறு பிரச்சாரம் மேற்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x