Last Updated : 05 Dec, 2014 03:42 PM

 

Published : 05 Dec 2014 03:42 PM
Last Updated : 05 Dec 2014 03:42 PM

அசாம், அருணாச்சலில் மிதமான நிலநடுக்கம்

அசாம் மாநிலத்தின் சோனிட்புர் மாவட்டம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் இது 4.8 என்று பதிவானதாக ஷில்லாங் நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 5.24 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் உயிருக்கோ, உடமைகளுக்கோ சேதம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x