Published : 06 Dec 2014 09:53 AM
Last Updated : 06 Dec 2014 09:53 AM

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் உடல் தகனம்

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யரின் உடல் கொச்சியில் நேற்று முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது மகன்கள் ரமேஷ், பரமேஷ் ஆகியோர் இறுதிச் சடங்குகளை நடத்தினர்.

முன்னதாக ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

கேரளாவில் உயர் நீதிமன்றம் உள்பட அனைத்து நீதிமன்றங்களுக் கும் நேற்று விடுமுறை அளிக்கப் பட்டிருந்தது. கொச்சியில் பள்ளி கள், அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை.

1968 ஜூலை 2-ம் தேதி கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். 1973 ஜூலை 17-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 1980 நவம்பர் 14-ம் தேதி அவர் பதவியில் இருந்து ஒய்வுபெற்றார்.

கடந்த நவம்பர் 24-ம் தேதி அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கடந்த இரு வாரங்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் அவர் மறைந்தார்.

தலைவர்கள் இரங்கல்

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் மறைவுக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக ஆளுநர் கே.ரோசய்யா:

சிறந்த சட்ட அறிவையும், எளிமை யையும் தன்னகத்தே கொண்டவர் கிருஷ்ணய்யர். மக்களாட்சி கொள்கை, சட்டம் மற்றும் நீதியை நிலைநாட்ட போராடியவர். அவரது மறைவு நீதித்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு. கிருஷ்ணய்யரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு, அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா:

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் சிறந்த மனிதநேயம் மிக்கவரும், சமூக சேவகருமாவார். உச்சநீதி மன்ற நீதிபதியாக, நீதித்துறை வரலாற்றில் பொன்னெழுத்துக்க ளால் பதிக்கக்கூடிய கணக்கி லடங்கா தீர்ப்புகளை வழங்கியுள் ளார். இவரது மறைவு நாட்டுக்கே ஏற்பட்ட பேரிழப்பு. இவரை இழந்து வாடும் இவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திமுக தலைவர் மு.கருணாநிதி:

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், இந்தியாவில் எழுந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து தனது ஆக் கப்பூர்வமான, மனிதநேயமிக்க கருத்துகளை அச்சமின்றி பலமுறை வெளிப்படையாக தெரிவித்தவர். மரண தண்டனைக்கு எதிரான அவ ருடைய கருத்து இந்திய நீதிமன்ற வரலாற்றில் என்றென்றும் நிலைத் திருக்கக் கூடியது. திமுக சார்பில் அவரது குடும்பத்தாருக்கும், நண் பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் கேரள முதல்வர் உம்மன்சாண்டி, தி.க.தலைவர் கி.வீரமணி மற்றும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி, சமக உள்ளிட்ட கட்சிகளும் இரங்கல் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x