Last Updated : 04 Dec, 2014 10:36 AM

 

Published : 04 Dec 2014 10:36 AM
Last Updated : 04 Dec 2014 10:36 AM

பெங்களூருவில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: அடிவாங்கிய இளைஞர் கவலைக்கிடம்

பெங்களூருவில் இளம்பெண் ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை பொது மக்கள் கட்டி வைத்து அடித்துள் ளனர். கொடூரமாக தாக்கியதால் படுகாயம் அடைந்த அவர் கவலைக்கிடமாக இருக்கிறார்.

இது தொடர்பாக பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி கூறியதாவது:

பெங்களூருவில் உள்ள ஜாஹனஹள்ளி அருகே இளை ஞர் ஒருவர் அங்குள்ள பெண் ணுக்கு செவ்வாய்க்கிழமை இரவு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண் அழுதுக் கொண்டே போய் அருகில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த‌ பொது மக்கள் அவரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இதனால் அந்த இளைஞர் மயங்கி சரிந்தள்ளார். இதுகுறித்து சிலர் ஜே.பி.நகர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

புதன்கிழமை காலை சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் அவரை மீட்டு நிமான்ஸ் மருத்துவ மனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். ரத்தம் அதிகளவில் வெளியேறிய தால் அவரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. இளைஞ‌ரை தாக்கிய 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம்.

சமீப காலமாக பெங்களூரு வில் அதிகரித்துவரும் பெண் களுக்கு எதிரான குற்றங்களால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந் துள்ளனர். அதனால் சில இடங் களில் குற்றவாளிகளை பாதிக் கப்பட்டவர்களும், பொதுமக்க ளும் தாக்குவது ஊடகங்களில் இடம்பெறுகிறது.

அதைப் போல இவர்களும் அந்த இளைஞர்களை தாக்கி இருக்கலாம் என சந்தேகிக் கிறோம். மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு தாக்குதலில் ஈடுபடு வதை ஊக்குவிக்க முடியாது. சட்டத்தை கையில் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x