Published : 06 Dec 2014 08:56 AM
Last Updated : 06 Dec 2014 08:56 AM

நேரடி காஸ் மானிய திட்டத்தில் சேர ஆதார் எண் அவசியமில்லை: வங்கி கணக்கு கட்டாயம் தேவை

மத்திய அரசின் நேரடி காஸ் மானிய திட்டம் அடுத்த மாதம் அமல்படுத்தப் பட உள்ளது. இதன்படி நேரடி காஸ் மானியம் பெற ஆதார் எண் அவசியம் இல்லை. ஆனால் வங்கி கணக்கு வைத்து இருப்பது கட்டாயம் ஆகும்.

ஆதார் அட்டை இல்லாதவர்கள் நேரடி காஸ் மானியம் பெற, காஸ் ஏஜென்சியிடம் படிவம் 3,4 பெற்றுக் கொள்ள வேண்டும். படிவம் மூன்றில் தனிநபர் விவரங்கள் மற்றும் காஸ் நிறுவனம் எஸ்.எம். எஸ் மூலம் அனுப்பும் 17 இலக்கு கொண்ட காஸ் எண்ணை பூர்த்தி செய்து வங்கியில் கொடுக்க வேண்டும். படிவம் நான்கில் தனிநபர் விவரம், 17 இலக்கு கொண்ட நுகர்வோர் காஸ் எண்ணை பூர்த்தி செய்து ஏஜென்சியில் ஒப்படைக்க வேண்டும். அவற்றுக்கு ரசீது வழங்கப்படும். ஆதார் எண் உள்ள வர்கள் வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் கொண்டு ஏஜென்சி யில் விநியோகம் செய்யப்படும் மானிய திட்டத்துக்கான படிவம் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும். படிவம் ஒன்றில் தனிநபர் விவரங்கள் மற்றும் ஆதார் எண்ணை பூர்த்தி செய்து அவர்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில் ஒப்படைக்க வேண்டும். அதனை பெற்றுக் கொண்டு வங்கி அதிகாரிகள் ஒப்புகை ரசீதை வழங்குவார்கள்.

படிவம் இரண்டில் தனிநபர் விவரத்தைக் குறிப்பிட வேண்டும். அதே படிவத்தில் ஆதார் அட்டை நகல் எடுப்பதற்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மட்டும்தான் ஆதார் அட்டை நகல் எடுத்து தரவேண்டும். இந்த இரண்டாவது படிவத்தை காஸ் ஏஜென்சியில் கொடுத்த பின்பு அவர்களும் ஒப்புகை ரசீது வழங்குவார்கள்.

இது குறித்து காஸ் ஏஜென்சி வைத்துள்ள சப்தரிஷி என்பவர் கூறும்போது, “நுகர்வோரின் காஸ் முகவரி மற்றும் ஆதார் எண் முகவரி ஒரே இடத்தில் இருக்க வேண்டும். முகவரி மாறி இருந்தால் தற்போது உள்ள முகவரியின் ரேஷன் அட்டை போன்ற ஏதேனும் ஒரு அரசு அத்தாட்சி அல்லது வீட்டின் வாடகை ஒப்பந்த பத்திரம் ஆகியவற் றின் நகலை ஏஜென்சியில் கொடுக்க வேண்டும். வங்கி கணக்கு எந்த பகுதியில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆதார் எண் அவசியம் இல்லை” என்றார்.

படிவம் வாங்க செல்லும் நுகர்வோர்கள் காஸ் பில் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். புகைப்படம், காஸ் பாஸ் புக் போன்றவை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. நுகர்வோர்கள் படிவத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். காஸ் நிறுவனங்க ளின் ஆன்லைன் முகவரியிலும் படிவங்களைப் பூர்த்தி செய்து ஏஜென்சியிடம் ஒப்படைக்கலாம். இந்த நடைமுறை தமிழகத்தில் உள்ள இண்டேன், இந்துஸ்தான், பாரத் ஆகிய பொதுத்துறை நிறு வனங்களின் காஸ் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு பொருந்தும்.

நுகர்வோர் மானிய திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதற்கான தகவல், திட்டத்தை அரசு அமல்படுத்தியதும் காஸ் நிறுவனங்கள் எஸ்.எம்.எஸ் மூலம் தெரியப்படுத்தும். காஸ் இணைப்பு வைத்துள்ள நுகர்வோர்கள் நேரடி காஸ் மானிய திட்டத்தில் ஜூன் மாதத்துக்குள் சேர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x