Published : 04 Dec 2014 01:10 PM
Last Updated : 04 Dec 2014 01:10 PM

சிவில் சர்வீஸ் தேர்வு வயது வரம்பில் மாற்றம் இல்லை

யூ.பி.எஸ்.சி. (யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன்) தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வயது வரம்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்று பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் மக்களவையில் அறிவித்தார்.

இதுகுறித்து ஆரணி தொகுதி யின் அதிமுக உறுப்பினர் வி.ஏழுமலை எழுப்பிய துணைக் கேள்விக்கு ஜிதேந்தர் சிங் கூறும் போது, “சில நாட்களுக்கு முன்பு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற் கான வயது வரம்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகை களில் வெளியான செய்தியில் உண்மை இல்லை. இன்றைய நில வரப்படி சிவில் சர்விஸ் எழுதும் பொதுப் பிரிவினர் 32 வயது வரை ஆறு முறை தேர்வு எழுதலாம். ஓ.பி.சி. பிரிவினர் 35 வயது வரை ஒன்பது முறையும், பழங்குடி மற்றும் மிகவும் பிறபடுத்தப்பட்ட வகுப்பினர் 37 வயது வரை எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x