Last Updated : 17 Nov, 2014 11:58 AM

 

Published : 17 Nov 2014 11:58 AM
Last Updated : 17 Nov 2014 11:58 AM

காஷ்மீர் முதல்வர் வீட்டில் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கிச் சூடு

ஜம்மு காஷ்மீர் முதல்வர் வீடு அருகே பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் திடீரென வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தின்போது முதல் வர் ஒமர் அப்துல்லா, லடாக்கில் உள்ள நுப்ராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டி ருந்தார்.

ஸ்ரீநகரின் குப்கார் சாலையில் உள்ள முதல்வர் ஒமர் அப்துல்லா வீட்டுக்கு எல்லைப் பாதுகாப்புப் படையினர் சார்பில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டின் அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர் கேஷ்டோ கோஷ், நேற்று காலை 7 மணியளவில் திடீரென வானத்தை நோக்கி துப்பாக்கியால் 12 ‘ரவுண்ட்’ சுட்டார்.

அங்கிருந்த காவலர்கள், அவரை மடக்கிப் பிடித்து துப்பாக்கியை கைப்பற்றினர். பின்னர், அந்த வீரரை கைது செய்தனர். அவர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், மன அழுத்தம் காரணமாக இத்தகைய செயலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதால், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதாக நினைத்து முதல்வரின் வீட்டினுள் இருந்த வர்கள் பதற்றமடைந்தனர்.

இச்சம்பவத்தின்போது, முதல்வர் ஒமர் அப்துல்லா, லடாக்கில் உள்ள நுப்ராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டி ருந்தார். அவர் ட்விட்டர் இணைய தளத்தில் கூறியுள்ளதாவது:

“இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ள போதிலும், எனது பாதுகாப்புப் படையினர் மீது முழு நம்பிக்கை உள்ளது” என்றார்.

இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாதுகாப்புப் படை வீரர் தவறுதலாக தனது தானியங்கி இயந்திரத் துப்பாக்கியை இயக்கி விட்டார். துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளோம். உயர் அதிகாரி களுடன் அவருக்கு எந்தவிதமான பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை. அவரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x