Last Updated : 19 Nov, 2014 10:12 AM

 

Published : 19 Nov 2014 10:12 AM
Last Updated : 19 Nov 2014 10:12 AM

திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டம்: விவாகரத்து வழக்குகள் துரிதமாக முடியும்

பெண்களுக்கு சாதகமாக திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான மசோதாவை குளிர்காலக் கூட் டத்தொடரில் அறிமுகப்படுத்து வதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

விவாகரத்துப் பெறுவதை எளிதாக்குவதற்காக, இந்து திரு மணச் சட்டம் -1955, சிறப்புத் திருமணச் சட்டம் 1954 ஆகிய இரண்டிலும் திருத்தங்கள் மேற் கொள்ளப்படவுள்ளன. கணவன்-மனைவி இருவரும் பிரிய முழு மனதுடன் சம்மதிக்கும் பட்சத்தில் உடனே விவாகரத்துக் கொடுக்க லாம் என சட்ட அமைச்சகம் பரிந் துரைத்துள்ளது.

சட்டத்துறை அமைச்சகம் திரு மணச் சட்டங்கள் (திருத்தம்) தொடர்பான வரைவை, அமைச் சகங்களுக்கு இடையிலான கருத் தைப் பெறுவதற்காக அனுப்பி யுள்ளது.

கருத்துகள் பெறப்பட்ட பின், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் டி.வி. சதானந்த கவுடா, வரைவை அமைச்சரவையின் இறுதி ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பார்.

சட்டத்திருத்தம், பெண்களுக்கு மேலும் சாதகமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. விவாகரத் தாகும் பட்சத்தில், கணவனின் அசையா சொத்துகள் மூலம் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு போதுமான அளவு இழப்பீடு வழங்குவது உட்பட பல்வேறு வகைகளில் பெண்களுக்குச் சாதகமான அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

விவாகரத்து வழக்குகள் இழு பறியாக நீடிப்பதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், மூன்றாண்டுகளுக்குப் பிறகு மனமொத்து கோரும் விவாகரத்து வழக்குகளில், ஒரு தரப்பினர் இரண்டாவது இணை மனு (ஜாய்ண்ட் அப்ளிகேஷன்) தாக்கல் செய்யாவிடில் விரைவில் முடிவெடுக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்க சட்ட அமைச்சகம் கருத்துரு சமர்ப்பித்துள்ளது.

மேலும், கணவனின் மரபுரி மைச் சொத்துகளில் இருந்து மனைவி மற்றும் குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்கும் தொகையை நீதிமன்றங்கள் முடிவு செய்வதற்கு அதிகாரம் வழங்கும் வகையில் பிரிவு 13 (எப்) புதிதாகச் சேர்க்கப் படவுள்ளது.

அமைச்சகங்களுக்கு இடை யிலான ஆலோசனைக்குப் பிறகும் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் அவையும் வரைவில் இடம் பெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x