Published : 10 Nov 2014 12:39 PM
Last Updated : 10 Nov 2014 12:39 PM
ஜார்கண்டில் போலீஸார் நடத்திய சோதனையில் 1,700 டெட்டனேட்டர்கள், 400 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட பல பயங்கர ஆயுதப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 25-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ஆம் தேதி வரை ஐந்து கட்டங்களாக நடக்க இருக்கும் நிலையில், நக்சல்கள் அதிகம் உலாவும் அம்மாநிலம் எங்கும் மத்திய சிறப்பு காவல்ப்படை சோதனையில் ஈடுப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திங்கட்கிழமை (இன்று) காலை லத்திஹர் மாவட்டத்தின் போகாக்கர்-டண்டியா இடையே மாநிலத்தின் ஜாகுவார் போலீஸாரும் கோப்ரா படையினரும் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அங்கு தீவிரவாத செயல்களுக்கு பயன்ப்படுத்தப்படும் அதிநவீன வெடிப் பொருட்கள் சிக்கின.
இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கும்போது, "இந்த பகுதியில் 1,700 டெட்டனேட்டர்கள், 3 காஸ் சிலிண்டர்கலுடன் இனைந்த 50 கி.லோ. வெடி மருந்து, 5 கிலோ கேன் வெடிகுண்டு, 400 கிலோ யூரியா மற்றும் பெட்ரோல் நிறைந்த வெடிமருந்து, ராட்சத பராமரிப்பு மெஷின்கள், 2 ட்ரில்லர்கள், 400 ஊசி, தொழில்நுட்ப பொருட்கள், 200 குக்கர் குண்டுகள், மேம்படுத்தப்பட்ட குண்டு வகைகளை தயாரிக்க கூடிய உபகரணங்கள் ஆகியன கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் இங்கு குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளை குறிவைத்து சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த தேடுதல் வேட்டையின் மூலம் நிச்சயம் நாச வேலை தடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வேட்பாளர்களுக்கும் முக்கிய இடங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநிலம் முழுவதிலும் நக்சல்கள் வேட்டைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களது இருப்பிடங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT