Published : 10 Nov 2014 12:53 PM
Last Updated : 10 Nov 2014 12:53 PM
உத்தரப் பிரதேசத்தின் முதல் முறை எம்.பி.யான சாத்வி நிரஞ்சன் ஜோதி மத்திய அமைச்சரவைக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை 7ல் இருந்து 8 ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, மதபோதகரான ஜோதி (47) அமைச்சரவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். இவர் நாடாளுமன்றத் தேர்தலில் பதேபூர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர் ஆவார்.
மத்திய அமைச்சரவையில் சுஷ்மா ஸ்வராஜ், உமா பாரதி, நஜ்மா ஹெப்துல்லா, மேனகா காந்தி, ஹர்ஸிம்ரத் கவுர் பாதல், ஸ்மிருதி இராணி மற்றும் நிர்மலா சீதாராமன் என ஏற்கெனவே ஏழு பெண்கள் உள்ளனர்.
இந்நிலையில், ஜோதி அமைச்சரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் இந்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மேற்கொண்ட அமைச்சரவை விரிவாக்கத்தினால் தற்போது மத்தியில் 66 அமைச்சர்கள் உள்ளனர். நேற்றைய விரிவாக்கத்தில் மட்டும் 21 புதிய அமைச்சர்கள் அமைச்சரவைக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT