Published : 11 Nov 2014 12:27 PM
Last Updated : 11 Nov 2014 12:27 PM

கொல்கத்தாவில் தேசிய புலனாய்வு அமைப்பு அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு

கொல்கத்தா பர்த்வான் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தேசிய புலனாய்வு அமைப்பு அலுவலகம் அருகே திங்கட்கிழமை இரவு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் யாருக்கு காயம் ஏற்படவில்லை.

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் அருகே அமைந்துள்ள சி.ஆர்.பி.எப். போலீஸ் அலுவலகம் அருகே, சமீபத்தில் நடந்த பர்த்வான் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் தேசிய புலனாய்வு அமைப்பினர் தற்காலிக அலுவலகம் ஏற்படுத்து தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) இரவு அங்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் அங்கிருந்த பேருந்து நிலையம் தகர்க்கப்பட்ட்து. அதிர்ஷடவசமாக இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தேசிய புலனாய்வு அதிகாரி கூறும்போது, "இரவு 7.30 மணி அளவில் குண்டு வெடிப்பு நடந்தது. வாகனத்தில் சென்ற நபர் வெடிகுண்டை அலுவலக சுவர் ஓரம் தூக்கி எறிந்ததை சி.ஆர்.பி.எப். போலீஸார் கவனித்துள்ளார். முதற்கட்டமாக 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வெடித்தது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கச்சா எண்ணையிலான குண்டு தான் என்றாலும் இது சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு தான். மேற்கு வங்க போலீஸார் இது தொடர்பான விசாரணையை தொடங்கி உள்ளனர்" என்றார்.

கொல்கத்தாவில் அக்டோபர் 2-ஆம் தேதி கக்ரஹாரில் உள்ள ஒரு வீட்டில் குண்டு வெடிப்பு நடந்தது. குண்டுவெடிப்பின்போது வெடித்ததில், தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் ஷகீல் அஹமது மற்றும் சோவன் மண்டல் ஆகிய 2 பேர் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்தில் தீவிரவாதி என்று சந்தேகிக்கக்கூடிய ஹசன் சாஹிப் என்பவர் காயமடைந்தார்.

இது தொடர்பாக ஹசன் சாஹிப், 2 பெண்கள் உட்பட 5 பேர் போலீஸார் விசாரணையில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x