Published : 21 Nov 2014 08:53 AM
Last Updated : 21 Nov 2014 08:53 AM

ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளில் பிரசவ காலத்தில் 3,000 பெண்கள் மரணம்

ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவமனைகளில், கடந்த 5 ஆண்டுகளில் பிரசவ காலத்தில் 3,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பலியாகி உள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது.

போதிய வசதி இல்லாத காரணத்தால் ஏழை தாய்மார்கள் பிரசவ காலத்தில் அரசு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்படு கின்றனர். ஆனால் முறையான சிகிச்சை கிடைக்காமலும், மருத்துவமனைகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் போவதாலும் இவர்களில் பலர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் 1000 பிரசவங்களில் 42 சிசுக்கள் உயிரிழக்கின்றன. சிசு மரணத்தை தடுக்க முடியாத அரசு, தாயின் மரணத்தையாவது தடுக்க முயற்சிக்கலாம். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 3,000 க்கும் மேற்பட்ட தாய்மார்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தென் மாநிலங்களிலேயே தமிழகம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களைவிட ஆந்திரத்தில்தான் இந்த இறப்பு சதவீதம் அதிகமாக உள்ளது. ஆரம்ப சுகாதார மையங்களில் அனுமதிக்கப்பட்ட அளவில் 10 சதவீதம்கூட மருத்துவர்களோ உதவியாளர்களோ இல்லாததே இதற்கு முக்கிய காரணம்.

மண்டல அளவிலான மருத்துவ மனைகளில் மருத்துவர்கள் இருந் தாலும் போதுமான உள்கட்ட மைப்பு வசதிகள் இல்லை. மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் தட்டுப்பாடு ஒருபுறம் இருந்தாலும் உள் கட்டமைப்பு வசதி குறைபாடும், அலட்சிய போக்கும் நீடிப்பதால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. உரிய காலத்தில் மருத்துவ வசதி கிடைக்காமல் போவதால்தான் தாய்-சேய் மரணங்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கடந்த 2009-10 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளில் 4.09 லட்சம் தாய்மார்கள் பிரசவத் துக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 595 பேர் இறந்துள்ள னர். 2010-11-ல் 523 பேரும், 2011-12-ல் 595 பேரும், 2012-13-ல் 645 பேரும், 2013-14-ம் ஆண்டில் 593 பேரும் பிரசவ காலத்தில் உயிரிழந்துள்ளனர்.

இதில் அதிகபட்சமாக கர்னூல் மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரி யாக 95 பேரும், அடுத்தபடியாக விசாகப்பட்டினத்தில் ஆண்டுக்கு 60 தாய்மார்களும் பல்வேறு காரணங்களால் பிரசவ காலங்களில் பலியாகின்றனர். இதிலும் பழங்குடியின தாய்மார்கள் அதிக அளவில் பலியாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசவ கால தாய்-சேய் மரணத்தைக் குறைப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பிரச்சாரங்களை செய்து வருகின்றன. குறிப்பாக, தேசிய கிராமிய ஆரோக்கிய திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் ஆந்திரவுக்காக ரூ. 100 கோடி செலவிடப்பட்டுள்ளது.

அப்படி இருந்தும் தாய்-சேய் மரணங்கள் அதிகரிப்பது ஏன் என்பது குறித்து அரசு, மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் ஆலோசிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x