Last Updated : 14 Jul, 2019 03:03 PM

 

Published : 14 Jul 2019 03:03 PM
Last Updated : 14 Jul 2019 03:03 PM

முதன்முறையாக பன்னாட்டுக் கூட்டுறவுகளின் வணிகக் கண்காட்சி: டெல்லியில் அக்டோபர் 11-ல் தொடங்குகிறது

முதன்முறையாகப் பன்னாட்டு கூட்டுறவுகளின் வணிகக் கண்காட்சி, டெல்லியில் அக்டோபர் 11 முதல் தொடங்குகிறது. இது, இந்திய வேளாண் விளைபொருட்களின் ஏற்றுமதியை இரட்டிப்பாக்கவும், அவற்றை உலக மதிப்புத் தொடர் சங்கிலிகளுடன் இணைத்தலையும் குறிக்கோளாகக் கொண்டது.

வேளாண் ஏற்றுமதிக் கொள்கை 2018-ன்படி இந்தியாவில் முதன்முறையாக பன்னாட்டுக் கூட்டுறவுகளின் வணிகக் கண்காட்சி, பிரகதி மைதானத்தில் வரும் அக்டோபர் 11 முதல் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் வழிகாட்டுதலுடன் நெடாக் எனும் ஒரு பன்னாட்டு அமைப்பு, மூன்று அமைச்சகங்கள், நான்கு மாநில அரசுகள் மற்றும் பல இந்திய தலைமைக் கூட்டுறவு நிறுவனங்களின் துணையுடன் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த பன்னாட்டுக் கூட்டுறவுகளின் வணிகக் கண்காட்சி, கூட்டுறவுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான பெரிய தளமாக அமையும்.

இதன்மூலம் அதன் உறுப்பினர்களான விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள், பெண்கள் மற்றும் பழங்குடியினர்/ பட்டியலினத்தவருக்கு நேரடியான நன்மைகள் கிடைக்கும். மூன்று நாள் கண்காட்சியில் பெரிய எண்ணிக்கையிலான இந்தியக் கூட்டுறவு நிறுவனங்களும் பன்னாட்டுக் கூட்டுறவு அமைப்புகளும் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மற்றும் வெளிநாடுகளின் கூட்டுறவுகளுக்கு இடையேயான வணிகத்தை வளர்த்தெடுப்பதை இக்கண்காட்சியின் நோக்கமாக இருக்கும்; பல வகையான பொருட்களின் தொடக்க உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குனர்களுடன் கலந்துரையாடுவதற்கும் இந்தக் கண்காட்சி மிகப் பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.                

இக்கண்காட்சி பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.iictf.in அல்லது www.ictf.co.in என்ற இணையதளங்களைப் பார்க்கலாம். கண்காட்சிக்கான இணைய வழிப்பதிவு இணையதளங்களில் செயல்முறையில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x