Last Updated : 06 Nov, 2014 09:18 AM

 

Published : 06 Nov 2014 09:18 AM
Last Updated : 06 Nov 2014 09:18 AM

விதர்பாவை பிரிப்பது தாயையும் குழந்தையையும் பிரிப்பது போலாகும்: சிவசேனா கருத்து

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து விதர்பாவை பிரிப்பது தாயையும் குழந்தையையும் பிரிப்பது போலாகும் என்று சிவசேனா கூறியுள்ளது.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், முதல்வர் பதவியேற்ற பின் முதல்முறையாக நாக்பூர் சென்றபோது, “விதர்பா மாநிலம் உரிய நேரத்தில் உருவாக் கப்படும்” என்றார்.

இந்நிலையில் சிவ சேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் நேற்றைய தலை யங்கத்தில் கூறியிருப்பதாவது:

சமீபத்திய சட்டமன்ற தேர் தலில் விதர்பா பகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இதனை மகாராஷ்டிர மாநிலத்தை பிரிப்பதற்கு அளிக்கப் பட்ட வாக்குகளாக பாஜக கருதக் கூடாது. மகாராஷ்டிரத்தில் இருந்து விதர்பாவை பிரிப்பது தாயையும் குழந்தையையும் பிரிப்பது போலாகும்.

விதர்பாவைச் சேர்ந்த முதல்வர் பட்னாவிஸ் பிரிவினை பற்றி பேசியுள்ளார். மகாராஷ்டிரத்தை காக்கவேண்டிய ஒருவர் மாநிலத் துக்கு துரோகம் செய்யத் துணிந்து விட்டதையே இது காட்டுகிறது. பிரிவினை பற்றி பேசுவதை விடுத்து அப்பகுதியின் வளர்ச்சியில் பாஜக கவனம் செலுத்த வேண்டும்.

நாக்பூரில் பட்னாவிஸ் பிரிவினை பற்றி பேசியதற்கு பதிலாக, நக்ஸலைட் ஆதிக்கம் மிகுந்த கட்சிரோலி, சந்திரபூர் பகுதிகளில் பாதுகாப்பு படைகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பது குறித்து பேசியிருக்க வேண்டும்.

ஆந்திராவில் இருந்து தெலங்கானா உருவாக்கப் பட்ட போது காங்கிரஸ் கட்சியை பாஜக குறை கூறியது. ஆனால் தற்போது பாஜக, பிரிவினை பற்றி பேசுகிறது.

ஒருங்கிணைந்த மகாராஷ் டிரத்துக்காக உயிர்நீத்த 105 தியாகிகளின் கனவுகளை நிறை வேற்றும் வகையில் முதல்வர் பட்னாவிஸ் செயல்பட வேண்டும்.

இவ்வாறு சாம்னாவில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x