Last Updated : 19 Nov, 2014 10:17 AM

 

Published : 19 Nov 2014 10:17 AM
Last Updated : 19 Nov 2014 10:17 AM

மகாராஷ்டிரத்தில் திடீர் தேர்தலுக்கு தயாராகுங்கள்: தேசியவாத காங்கிரஸாருக்கு சரத்பவார் கட்டளை

மகாராஷ்டிரத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிப்பதாக கூறிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றிக்கொண்டுள்ளது.

“மகாராஷ்டிரத்தில் பாஜக அரசு நிலைத்திருப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு அல்ல. தொண்டர்கள் எந்நேரமும் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும்” என்று இக்கட்சியின் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 2 நாள் மாநாடு ராய்காட் மாவட்டம் அலிபாக் என்ற இடத்தில் நேற்று தொடங்கியது. இம்மாநாட்டில் சரத்பவார் தொண்டர்களிடையே பேசும்போது, “மகாராஷ்டிரத்தில் மைனாரிட்டி பாஜக அரசு நிலைத் திருப்பதற்கு நமது கட்சி எந்த ஒப் பந்தமும் செய்து கொள்ளவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நமது கட்சி நடுநிலை வகித்தது. அரசை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ நாம் வாக்களிக்க வில்லை. மகாராஷ்டிர அரசியல் நிலவரம் நிலையற்றதாக உள்ளது. இங்கு எப்போது வேண்டுமானா லும் தேர்தல் வரலாம். தேர்தலை எதிர்கொள்ள தொண்டர்கள் எந் நேரமும் தயராக இருக்க வேண்டும்” என்றார்.

மகாராஷ்டிரத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. என்றாலும் அக்கட்சி பெரும்பான்மை பெற வில்லை. இந்நிலையில் பாஜக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

இதனிடையே தேர்தலுக்கு முன் கூட்டணியில் இருந்து வெளி யேறிய சிவசேனாவுடன் இணைந்து ஆட்சியமைக்க பாஜக முயற்சி செய் தது. ஆனால் துணை முதல்வர் பதவி அல்லது முக்கிய துறைகள் வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கையை பாஜகவால் ஏற்க முடியவில்லை. இதனால் இவ்விரு கட்சிகள் இடையே மீண்டும் கூட்டணி ஏற்படாமல் போனது.

மகாராஷ்டிரத்தில் தனித்து ஆட்சியமைத்த பாஜக, கடந்த 12 ம் தேதி நம்பிக்கை வாக்கு கோரியது. இதில் குரல் வாக் கெடுப்பு மூலம் பாஜக அரசு வெற்றி பெற்றது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

குரல் வாக்கெடுப்பை நிராகரித்த சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சி கள், ஆளுநரை சந்தித்து மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப் படவேண்டும் என்று வலியுறுத்தின. இந்தப் பின்னணியில் சரத்பவார் இவ்வாறு பேசியுள்ளார்.

இந்நிலையில் மகாராஷ்டிர பாஜக தலைவர் மாதவ் பண்டாரி செய்தியாளர்களிடம் நேற்று கூறும் போது, “சரத்பவாரின் அறிவிப்பு எதிர்பாராதது அல்ல. அவரது அரசி யலை உன்னிப்பாக கவனித்து வரும் யாரும் ஆச்சரியப்பட மாட் டார்கள். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவை நாங்கள் கோரவில்லை. பவார் தாமாக முன் வந்து நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கூறினார். ஒரு மாதத் துக்குள் சரத்பவார் தனது வார்த்தை களை மாற்றிக்கொண்டுவிட்டார்” என்றார்.

இதனிடையே முதல்வர் பட்னாவிஸ் கடந்த ஞாயிற்றுக் கிழமை கூறும்போது, “எனது அமைச்சரவை டிசம்பர் 8-ம் தேதிக்கு முன் விரிவுபடுத்தப்படும். சிவசேனாவுடன் பேச்சுவார்த் தைக்கான கதவு இன்னும் திறந்தே இருக்கிறது” என்றார்.

சிவசேனா முன்னாள் தலைவர் பால் தாக்கரேவின் 2-வது நினைவு நாளையொட்டி மும்பை சிவாஜி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நினைவிடத்தில் பட்னா விஸ் நேற்று முன்தினம் அஞ்சலி செலுத்தினார். ஆஸ்திரேலியாவில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியும் பால் தாக்கரேவுக்கு நினைவஞ்சலி செலுத்தியிருந்தார்.

நினைவு நாள் நிகழ்ச்சிக்கு இடையே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே செய்தியாளர் களிடம் கூறும்போது, “அமைச் சரவையில் சேருவது தொடர்பாக நாங்கள் எந்த முடிவும் எடுக்க வில்லை. இது தொடர்பாக சூழ் நிலைக்கு ஏற்ப முடிவு எடுப்போம். சட்டமன்றத்தில் வலுவான எதிர்க் கட்சியாக செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை மட்டும் இப்போது சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

இதனிடையே பாஜக அரசுக்கு சரத்பவாரின் எச்சரிக்கை குறித்து உத்தவ் தாக்கரே நேற்று கூறும் போது, “சரத்பவார் சொன்ன சொல்லை காப்பாற்றுபவர் அல்ல. அவர் எதைச் சொன்னாலும் செய்யமாட்டார். செய்யப்போவ தையும் அவர் சொல்லமாட்டார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x