Published : 06 Aug 2017 12:14 PM
Last Updated : 06 Aug 2017 12:14 PM

திருப்பதி கோயில் மலைப்பாதையில் கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரிக்கை

திருமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதையில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என குறைகேட்பு நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரியிடம் பக்தர் ஒருவர் கோரிக்கை விடுத்தார்.

பக்தர்களின் குறை கேட்கும் ‘டயல் யுவர் இ ஓ’ எனும் மாதாந்திர நிகழ்ச்சி நேற்று முன்தினம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நடந்தது. இதில் பக்தர்களிடம் தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் குறைகளை கேட்டறிந்தார். அப்போது திருமலையில் உள்ள ஸ்ரீவாரி பாதம் என்ற இடத்தில் அதிக குப்பைகள் தேங்கியுள்ளதாக திருப்பதியை சேர்ந்த பக்தர் ஒருவர் புகார் கூறினார். இது உடனடியாக சரிசெய்யப்படும் என அனில்குமார் சிங்கால் உறுதி அளித்தார். ஸ்ரீவாரி சேவகர்கள் ஒருவர் அல்லது இருவர் வந்தாலும் அனுமதி வழங்க வேண்டுமென நிஜாமாபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் கோரிக்கை விடுத்தார். இது நிராகரிக்கப்பட்டது. 10 பேருக்கு குறைவாக இருந்தால் ஸ்ரீவாரி சேவை செய்ய அனுமதி அளிக்க இயலாது என தலைமை நிர்வாக அதிகாரி பதிலளித்தார். விஜயவாடாவை சேர்ந்த ரவி என்ற பக்தர், நடந்துசெல்லும் மலைப்பாதையில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இதுகுறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என அனில் குமார் சிங்கால் உறுதியளித்தார்.

திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை நேற்று தேவஸ்தானம் வெளியிட்டது. மொத்தம் 57,804 ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் பெறும் வசதியை தேவஸ்தானம் ஏற்படுத்தியது. இதன் மூலம் டிக்கெட் பெறும் பக்தர்கள் வரும் நவம்பர் மாதம் சுவாமியை தரிசனம் செய்யலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x