Published : 07 Nov 2014 10:37 AM
Last Updated : 07 Nov 2014 10:37 AM
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மத்திய அமைச்சராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், கோவாவின் அடுத்த முதல்வர் பட்டியலில் சுகாதார அமைச்சர் மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் ஆகிய இருவரின் பெயர்கள் முன்னிலை வகிக்கின்றன.
அடுத்த முதல்வரின் பெயரை பாஜக ஆட்சிமன்றக் குழு நாளை அறிவிக்கும் என தெரி விக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை விரிவுபடுத்தப்பட உள்ளது. இதில், கோவா முதல் வர் மனோகர் பாரிக்கருக்கு பாதுகாப்புத் துறை அளிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், மனோகர் பாரிக்கர் முதல்வர் பதவியை ராஜி னாமா செய்து விட்டால், அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
இருவர் போட்டி
கோவா சுகாதாரத் துறை அமைச்சர் லட்சுமிகாந்த் பரிசேகர், சட்டப்பேரவைத் தலைவர் ராஜேந்திர அர்லேகர் ஆகியோரின் பெயர்கள் கோவாவின் அடுத்த முதல்வர் பட்டியலில் முன்னி லையில் உள்ளன. இருவருமே ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட வர்கள். மேலும், கட்சியில் மாநிலத் தலைவர் பொறுப்பையும் வகித் தவர்கள்.
பர்சேகர் இதுதொடர்பாகக் கூறும்போது, “கட்சி என்ன முடிவு செய்கிறதோ அதன்படி நடப்பேன். நான் பந்தயத்தில் இல்லை. முதல்வர் பதவிக்கு பந்தயம் எதுவும் இல்லை. கட்சிதான் முடிவெடுக்கும்” என்றார்.
அர்லேகர் கூறும்போது, “இது தொடர்பாக என்னை யாரும் அணுக வில்லை. அதேசமயம் கட்சி எனக்கு ஏதேனும் பொறுப்பளித்தால், அதனைச் செவ்வனே நிறை வேற்றுவேன்” என்றார்.
நாளை அறிவிப்பு
முதல்வர் பதவியை பாரிக்கர் நாளை ராஜினாமா செய்வார் எனக் கூறப்படுகிறது. அன்றைய தினம் கட்சியின் மத்திய ஆட்சிக் குழு கோவாவின் அடுத்த முதல்வர் யார் என்பதை அறிவிக்கும்.
இது தொடர்பாக பாரிக்கர் கூறும்போது, “அடுத்த முதல்வர் யார் என்பதில் தகுதி அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு உட்பட ஏராளமான விவகாரங்கள் உள்ளன.
இது உட்கட்சி விவகாரம். வரும் 8-ம் தேதி காலை 10 மணிக்கு கட்சியின் மத்திய ஆட்சி மன்றக் குழு கூடி, அடுத்த முதல்வர் யார் என்பதை அறிவிக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT