Published : 09 Aug 2017 09:03 AM
Last Updated : 09 Aug 2017 09:03 AM
சந்திர கிரகணத்தையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரத்திற்கு பின் நேற்று அதிகாலை திறக்கப்பட்டது.
சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான அனைத்து கோயில்களும், நேற்று முன் தினம் மாலை 4.30 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, கிரகண காலம் முடிந்ததும், நேற்று அதிகாலை 2 மணிக்கு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை திறக்கப்பட்டது.
அதன் பின்னர், கோயில் முழுவ தும் ஆகம விதிகளின்படி சுத்தம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் அதிகாலை 3 மணியிலிருந்து பக்தர்கள் சுவா மியை தரிசனம் செய்ய அனுமதிக் கப்பட்டனர். சந்திர கிரகண நாளன்று மட்டும் சுவாமியை பிற்பகல் 4.30 வரை 39,000 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT