Published : 01 Aug 2017 08:08 AM
Last Updated : 01 Aug 2017 08:08 AM

போதைப்பொருள் சிக்கிய விவகாரத்தில் தெலுங்கு நடிகர் தனிஷிடம் தீவிர விசாரணை

போதைப்பொருள் சிக்கிய விவகாரத்தில் கலால் துறை புலனாய்வு குழு முன்பு நடிகர் தனிஷ் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

ஹைதராபாத்தில் போதைப் பொருள் சிக்கிய விவகாரத்தில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த 12 பேருக்கு கலால் துறையினர் நோட்டீஸ் அனுப்பினர். அதன்பேரில் இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகர்கள் ரவிதேஜா, தருண், சுப்பராஜு, நவ்தீப், நடிகைகள் சார்மி, முமைத்கான், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே. நாயுடு, கலை இயக்குநர் சின்னா, ரவிதேஜாவின் கார் ஓட்டுநர் நிவாச ராஜு உள்ளிட்டோரிடம் கலால் துறை புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கலால் துறை அதிகாரிகள் முன்பு தெலுங்கு நடிகர் தனிஷ் நேற்று ஆஜரானார். அவரிடம் 4 அதிகாரிகள் விசா ரணை மேற்கொண்டனர். அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

இந்நிலையில், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த மேலும் சிலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திரையுலகை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பிரபல தொழிலதிபர்களுக்கும் விரைவில் நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x