Published : 24 Aug 2017 10:14 AM
Last Updated : 24 Aug 2017 10:14 AM
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இறைச்சிக்காக ஹைதராபாத் கொண்டு வரப்பட்ட 100 ஒட்டகங்களை போலீஸார் காப்பாற்றினர்.
செப்டம்பர் 2-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தெலங்கானா மாநிலத்தில் மாடுகளை விற்கவும் வாகனங்களில் ஏற்றிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தானில் இருந்து ஹைதராபாத் நகரத்துக்கு, பக்ரீத் பண்டிகைக்கு பலியிட 100 ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டன. இதுபற்றி அறிந்த மிருக வதை தடுப்பு ஆர்வலர்கள், இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து ஹைதராபாத் கொண்டு வரப்பட்ட 100 ஒட்டகங்களை போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT