Last Updated : 01 Aug, 2017 04:59 PM

 

Published : 01 Aug 2017 04:59 PM
Last Updated : 01 Aug 2017 04:59 PM

சுப்பிரமணியன் சுவாமியின் மனு ‘விளம்பர நல மனு’: சுனந்தா புஷ்கர் மகன் சாடல்

சுனந்தா புஷ்கர் மரணம் குறித்த வழக்கை விரைவில் முடிக்குமாறு அவரது மகன் மேனன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். மேலும் சுப்பிரமணியன் சுவாமியின் மனு ‘பொதுநல மனு’ அல்ல விளம்பர நல மனு என்று அவர் வர்ணித்துள்ளார்.

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகையின் நகலை 45 நாட்களுக்குள் அளிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மனு செய்திருந்தார், இதனையடுத்தே சுனந்தாவின் மகன் சுவாமியின் மனுவை இவ்வாறு வர்ணித்தார்.

இதனையடுத்து கோர்ட்டில் சுப்பிரமணியன் சுவாமி சார்பாக கூறப்பட்டதாவது:

எனக்கு எந்த ஒரு விளம்பரமும் தேவையில்லை. நான் ஒரு அரசியல்வாதி, மாநிலங்களவை உறுப்பினர். எனக்கு விளம்பரம் தேவையில்லை” என்று கூறியதோடு செய்தியாளர்களிடம் கூறும்போது, “தன் தாயாரது சொத்து அனைத்தையும் பெற்றுக் கொண்டு கனடாவில் செட்டில் ஆக விரும்புகிறார் சுனந்தாவின் மகன் மேனம். அவர் கனடா நாட்டு குடிமகன். அவர் இதற்கு முன் கோர்ட்டுக்கு வரவில்லை. அவர் இங்கு சொந்தக் காரணங்களுக்காக வந்துள்ளார்” என்றார் சுவாமி.

சுப்பிரமணியன் சுவாமி ஏன் இந்த வழக்கில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று சுனந்தாவின் மகன் மேனன் எழுப்பிய கேள்வி குறித்து நீதிமன்றம் மேனனிடம் கேள்வி எழுப்பியபோது, “மரணம் குறித்து முறையான விசாரணை வேண்டாமா? சிபிஐ விசாரணை வேண்டுமென்று சுப்பிரமணியன் சுவாமி கோருவதால் உங்களுக்கு என்ன பாதிப்பு? முறையான விசாரணை நடக்க வேண்டாமா? அதை ஏன் நீங்கள் தடுக்கப் பார்க்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியது.

ஜூலை 6-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சுவாமி கோர்ட் கண்காணிப்பின் கீழ் விசாரணை வேண்டும் என்று மனு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x