Published : 26 Aug 2017 08:07 AM
Last Updated : 26 Aug 2017 08:07 AM

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆந்திராவில் 72 அடி உயர விநாயகர் சிலை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நேற்று 72 அடி உயர விநாயகர் சிலை நிறுவி பூஜைகள் செய்யப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அனைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. சாலைகளில் விதவிதமான விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் நடைபெற்றன.

இம்முறை பல இடங்களில் பாகுபலி விநாயகர் சிலைகள் அனைவரையும் கவர்ந்தது. இதேபோன்று, விஜயவாடாவில் துந்தி கணேஷ் சேவா சமிதி சார்பில் ஜிம்கானா மைதானத்தில் 72 அடி உயர விநாயகர் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலைக்கு நேற்று காலை விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோன்று ஹைதராபாத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மஹாகணபதி சிலை 57 அடியில் அமைக்கப்பட்டது. இதற்கு ஆளுநர் நரசிம்மன் தம்பதியினர் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். ஹைதராபாத் ஃபிலிம் சிட்டியில் உள்ள விநாயகர் சிலைக்கு 500 கிலோ எடையில் லட்டு பிரசாதம் வைத்து வழிபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x